Sunday, September 28, 2008

யு எஸ் பி டிரைவ்........













யூ எஸ் பி டிரைவ்,பென் டிரைவ் என்றழைக்கப்படக்கூடிய டிரைவ்கள் இன்று பலவிதங்களில் பல அளவுகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.அவற்றின் மூலமாக தகவல்களினை காப்பி செய்வதும் மிகச்சுலபம்.அலுவலகங்களில் பாதுகாக்கப்பட வேண்டிய பல்வேறு தகவல்களும் உயரதிகாரிகளுக்குத்தெரியாமலேயே வெளியே செல்வதற்கு இது பயனளிக்கும்.
இதை தடுக்க வழி உள்ளதா?எனில் உள்ளது என்பது பதிலாகும்.
எப்படி தடுப்பது விண்டோஸ் எக்ஸ்பி எஸ்பி 2 ஆபரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட்ட கணிணியில் பதியப்பெற்ற டேட்டாவினை யூஎஸ்பி டிரைவின் உதவியோடு யாரும் காப்பி செய்யாதவாறு தடுக்கலாம்.
ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து ரன் ஆப்ஷனை தேர்வு செய்து ரன் விண்டோவில் Regedit என்று தட்டச்சு செய்யவும்.ஓகே பட்டனை கிளிக் செய்யவும். Registry editor விண்டோவில் HKEY_LOCAL_MACHINE\SYSTEM\current control set\Controlஎன்ற இடத்திற்குச்சென்று வலது பக்க பேனலில் கர்சரை வைத்து வலது கிளிக் செய்து நியூ மற்றும் கீ ஆப்ஷன்களினை பயன்படுத்தி StorageDevicePolicies என்ற பெயரில் புதிய கீயை உருவாக்கிக்கொள்ளவும்.பின் இடது பக்க பேனலில் புதிதாக உருவாக்கப்பட்ட StorageDevicePolicies என்ற கீயின் மீது கர்சரை வைத்து வலது கிளிக் செய்து நியூ மற்றும் DWORD Value ஆப்ஷன்களினை பயன்படுத்தி புதிதாக DwordValue வை உருவாக்கி கொள்ளவும்.Edit DWORD Value விண்டோவில் Value Name என்பதற்கு கீழே உள்ள சிறிய கட்டத்தில் 1என்று தட்டச்சு செய்து ஓகே பட்டனை கிளிக் செய்யவும்.Registry Editorவிண்டோவை மூடிவிட்டு கணிணியை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்யவும்.இனி யூ எஸ்பி போர்ட் மூலமாக பெண்டிரைவில் டேட்டாக்களினை காப்பி செய்ய முடியாது.

இன்றைய ஸ்பெஷல்:-

அமரர் சுஜாதா எழுதிய சிறுகதைகள் தொகுப்பு இங்கே மின் னூல் வடிவில் உங்களுக்காக. இங்கே தரவிரக்கவும்.