Sunday, September 14, 2008

இருண்ட தமிழகம்...........



























மன்மோகன் அரசாங்கம் ஒரு பக்கம் மின்சாரத்தேவைக்கு புஷ்ஷுடன் கைகோர்த்து அணு ஆயதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் அணு சக்தி ஒப்பந்தத்தினை நிறைவேற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் தயவினை எதிர்த்து பார்லிமெண்டில் பலப்பரிட்ச்சை செய்து தப்பித்து நிறைவேற்ற முயற்சித்துவருகிறது.அது நிறைவேறி 2020ஆம் ஆண்டுக்குள் சுமார் 5சதவீதத்திற்கு மின்சாரத்தேவை நிறைவேறும்.

அது வரை நாம் பொறுத்துஇருக்க வேண்டும்.இருண்டகாலத்திலிருந்து வெளிவர.
தற்போது தமிழகம் முழுவதும் மின்வெட்டு,அதுவும் அதிகாரப்பூர்வமாக.ஐந்து மணி நேரம்.பத்து நிமிடம் மின்வெட்டு என்றாலே தாங்க இயலாது.
அதெல்லாம் இருக்கட்டும்.இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வெயிலுக்கு பஞ்சமில்லை.மரபுசாரா எரிசக்தியை ஊக்கப்படுத்தலாமே?ஒரு ரூபாய் அரிசி,இலவச கலர் டீவி,இலவச எரிவாயு அடுப்பு என காலத்திற்கு ஒவ்வாத இலவசங்களினை ஒழித்து வீடுகளுக்கு சூரிய வெளிச்சம் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவாவது மின்சக்தியினை தயாரித்து உபயோகிக்க ஊக்கப்படுத்தலாமே.அதற்கு குறிப்பிட்ட அளவிற்கு மானியம் தரலாமே?அதற்கெல்லாம் முயன்று ஊக்கப்படுத்தலாமே?வளர்ந்து வரும் நகரங்களில் புதிதாகக்கட்டப்படுகின்ற வீடுகள் வணிகவளாகங்கள் ஆகியவற்றின் மின்சாரத்தேவையின் சிறு பங்கை இப்படி தாங்களே உருவாக்கிக்கொள்ள கட்டாயப்படுத்தலாமே?

இந்த முயற்சி குஜராத் மாநிலத்தில் பின்பற்றப்படுகிறது.ஆதலால் அம்மாநிலம் அனைத்து துறைகளிலும் முன்னணி வகிக்கின்றது.
தமிழ்நாடு மரபுசாரா எரிசக்தித்துறையின் இணையப்பக்கத்தினையும்,குஜராத் மாநில மரபுசாரா எரிசக்தித்துறையின் இணையப்பக்கத்தினையும் ஒப்பீடு செய்யுங்கள்.

இன்றைய ஸ்பெஷல்:-

C++ பற்றிய விவரத்தொகுப்பு இங்கே உங்களுக்காக தமிழில் மென்புத்தகமாக இங்கே தரவிரக்கவும்