Wednesday, December 31, 2008

Happy New Year





May the new year brings much happiness
to you & your family
and be happier than any year before
be happy healthy and successful


Wish You a Happy New Year 2009

Thursday, December 18, 2008

போட்டோ எடிட்டர் மென்பொருள்.......






டிஜிட்டல் காமிராக்களில்,செல்போன்களில் எடுக்கப்படுகின்ற போட்டோக்கள் முதல் இணையத்தில் கிடைக்கின்ற போட்டோக்கள் வரை அனைத்தையும் டிரிம் செய்வது முதல் அனைத்து நகாசு வேலைகளினையும் செய்ய பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கின்றன.இருந்தபோதிலும் அதில் குறிப்பிடத்தக்க மென்பொருள் போட்டோ ஸ்கேப்(Photoscape) இம்மென்பொருள் கொண்டு எடுக்கப்பட்ட போட்டோக்களில் ஆக்கல்,அழித்தல், சேர்த்தல் ,சுருக்குதல்,நீட்டல் போன்ற பல்வேறு வேலைகளினைச்செய்யலாம்.மேலும் பல்வேறு வகையான எபெக்ட் கொடுக்கலாம்.மேற்படி போட்டோ ஸ்கேப் மென்பொருளை தரவிரக்க இங்கே சுட்டுங்கள்.

இன்றைய ஸ்பெஷல்:-

சுகி சிவம் அவர்களின் "வெற்றி நிச்சயம்” தன்னம்பிக்கைத்தொடர் இங்கே மென்புத்தகமாக உங்களுக்கு.தரவிரக்க இங்கே சுட்டுங்கள்

பிடிஎஃப் பைல்களினை வெட்ட, ஒட்ட மற்ற பிற வேலைகள் செய்ய...............




பிடிஎஃப் பைல்களினை எடிட் செய்ய ,தனித்தனியாகப்பிரிக்க ,சேர்க்க போன்ற பல வேலைகளினைச்செய்ய பயன்படக்கூடிய ஓர் மென்பொருள் தான் பிடிஃபில் பிடிஎஃப் எடிட்டர்(PDfill PDF Editor).இதன் மூலம் ஏற்கனவே உள்ள பிடிஎஃப் கோப்பை தனித்தனியாக பிரிக்கவும் ,தனித்தனியாக உள்ள பிடிஎஃப் கோப்பை சேர்க்கவும் முடியும் ,அதுமட்டுமல்லாமல் புதிதாக பிடிஃஎஃப் கோப்பை உருவாக்கவும் முடியும்.மேலும் வாட்டர் மார்க் ,ஹெட்டர் புட்டர் போன்ற பல்வேறு வசதிகளினையும் சேர்க்கவும் முடியும்.பயனுள்ள மென்பொருள் இது என்றால் மிகையாகாது.இதனை பயன்படுத்த GhostScript 8.63 (10MB) மேலும் அறிய மற்றும் Sun Java Virtual Machine 1.4(8MB) மேலும் அறிய ஆகிய துணை மென்பொருள்கள் மிக அவசியம்.
மேற்படி பிடிஃபில் பிடிஎஃப் எடிட்டர்(PDfill PDF Editor) மென்பொருளினை தரவிறக்க இங்கே சொடுக்குங்கள்.பிடிஃபில் பிடிஎஃப் எடிட்டர்(PDfill PDF Editor) ஐப்பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்குங்கள்.
தரவிறக்க

பிடிஃபில் பிடிஎஃப் எடிட்டர்(PDfill PDF Editor)

GhostScript 8.63 (10MB)

Sun Java Virtual Machine 1.4(8MB)


இன்றைய ஸ்பெஷல்:-

பி.பெர்சிவல் 6000 தமிழ் பழமொழிகள் ஆங்கில விளக்கத்துடன் சிறு மென் புத்தகமாக இங்கே உங்களுக்காக.தரவிரக்க

Sunday, December 14, 2008

வீடியோ எடிட்டர்......


வீடியோ எடிட்டர் மென்பொருள் எளிதாக வீடியோக்களினை பிரிக்க சேர்க்க மற்றும் தேவையில்லாத பகுதிகளினைப் பிரிக்க பயன்படுகிரது.இம் மென்பொருள் கொண்டு AVI.MPEG ஆகிய வீடியோக்களிலிருந்து தேவையற்றப்பகுதிகளினை எடுத்து நாம் பயன்படுத்தலாம்.இம்மென்பொருளினை தரவிரக்க இங்கே சொடுக்குங்கள்


இன்றைய ஸ்பெஷல்:-

முல்லா கதைகள் தமிழில் சிறு மென்புத்தகமாக இங்கே உங்களுக்காக.தரவிரக்க இங்கே சுட்டுங்கள்

Saturday, December 13, 2008

ஸ்னாப் ஷாட்(Snap Shot)


நம்முடைய வலைதளம்,பிளாக் ஆகியவற்றினை மேம்படுத்த உதவக்கூடிய ஒரு புரோகிராமே ஸ்னாப் ஷாட்(Snap Shot).இதனை பயன்படுத்த ஸ்னாப் ஷாட்(Snap Shot) வலைத்தளத்திற்குச்சென்று பதிவு செய்து பின் நம்முடைய வலைத்தளத்தினையோ அல்லது வலைப்பதிவு முகவரியையோ அளித்தால் நாம் வலைத்தளத்தில் அல்லது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ள லிங்க் சிறு காட்சியாக விரியும்.அத்தளத்தினை நாம் அத்தளத்திற்குள்ளே நுழையாமலே நாம் அறிந்து தெரிந்து கொள்ள முடியும்.மேற்படி ஸ்னாப் ஷாட்(Snap Shot) புரோகிராமினை உங்கள் தளத்தில் சேர்த்து மெருகேற்றிப்பாருங்களேன்.
வலை முகவரி:-இங்கே சொடுக்குங்கள்

இன்றைய ஸ்பெஷல்:-

மர்பியின் விதிகள் 1000 தமிழில் சிறு மென் புத்தகமாக இங்கே உங்களுக்காக
இங்கே தரவிரக்கவும்.