Sunday, April 27, 2008

உன்னத மனிதர் கலாம்...



எளிமையின் இலக்கணமாக திகழ்ந்தவர்,இளைஞர்களைக்கவர்ந்தவர்,எதிர்கால இந்தியாவை வளமான இந்தியாவாக உருவாக்க கனவுகாணச்சொன்னவர்,முதல் குடிமகனாக தன் முத்திரையை பதித்தவர்,கேள்வி கேட்கச்சொல்லி மாணவமாணவிகளை ஊக்குவித்தவர் என சொல்லிக்கொண்டே போகலாம் திரு எ.பி.ஜே அப்துல்கலாம் பற்றி.

தலைமைப்பண்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தோல்வியை எதிர்கொள்ளும் விதம்,செய்யும் செயல்களில் வெற்றி பெற்றால் தலைமை ஏற்றுச்செய்பவர் அவ்வெற்றிக்கு முழுகாரணமும் தான் தான் என்று மார் தட்டிக்கொள்வார்,ஆனால் தோல்வி எழும் பட்சத்தில் அதன் முழுக்காரணத்தையும் தனக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மீது சுமத்தப்பட்டு விடும்.தற்போது நடைபெற்று வரும் செயல் இது தான் என்றால் அது மிகையாகாது.

APJ Abdul Kalam at Wharton India Economic forum , Philadelphia, March 22,2008ல் அளித்த ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு அப்துல் கலாம் அவர்கள் அளித்துள்ளபதிலும் தோல்வியை எதிர்கொள்ளும் பாங்குபற்றி அவர் பெற்ற பாடத்தினை தெளிவாக எடுத்துஇயம்புகின்றது என்றால் அது மிகை இல்லை

கேள்வியும் பதிலும் இங்கே உங்களுக்காக

'A Leader Should Know How to Manage Failure'


(Former President of India APJ Abdul Kalam at Wharton India Economic forum , Philadelphia, March 22,2008)
Question: Could you give an example, from your own experience, of how leaders should manage failure?
Kalam: Let me tell you about my experience. In 1973 I became the project director of India's satellite launch vehicle program, commonly called the SLV-3. Our goal was to put India's "Rohini" satellite into orbit by 1980. I was given funds and human resources -- but was told clearly that by 1980 we had to launch the satellite into space. Thousands of people worked together in scientific and technical teams towards that goal.
By 1979 -- I think the month was August -- we thought we were ready. As the project director, I went to the control center for the launch. At four minutes before the satellite launch, the computer began to go through the checklist of items that needed to be checked. One minute later, the computer program put the launch on hold; the display showed that some control components were not in order. My experts -- I had four or five of them with me -- told me not to worry; they had done their calculations and there was enough reserve fuel. So I bypassed the computer, switched to manual mode, and launched the rocket. In the first stage, everything worked fine. In the second stage, a problem developed. Instead of the satellite going into orbit, the whole rocket system plunged into the Bay of Bengal. It was a big failure.
That day, the chairman of the Indian Space Research Organization, Prof. Satish Dhawan, had called a press conference. The launch was at 7:00 am, and the press conference -- where journalists from around the world were present -- was at 7:45 am at ISRO's satellite launch range in Sriharikota [in Andhra Pradesh in southern India]. Prof. Dhawan, the leader of the organization, conducted the press conference himself. He took responsibility for the failure -- he said that the team had worked very hard, but that it needed more technological support. He assured the media that in another year, the team would definitely succeed. Now, I was the project director, and it was my failure, but instead, he took responsibility for the failure as chairman of the organization.
The next year, in July 1980, we tried again to launch the satellite -- and this time we succeeded. The whole nation was jubilant. Again, there was a press conference. Prof. Dhawan called me aside and told me, "You conduct the press conference today."
I learned a very important lesson that day. When failure occurred, the leader of the organization owned that failure. When success came, he gave it to his team. The best management lesson I have learned did not come to me from reading a book; it came from that experience.

மேன்மக்கள் மேன்மக்கள் அன்றோ.,

இன்றைய ஸ்பெஷல்:-

ஆத்திச்சூடி தமிழில் பிளாஷ் வடிவில் உங்களுக்காக இங்கே தரவிறக்கவும்

Saturday, April 26, 2008

கணிப்பொறி வேகமாக இயங்க.....



இணையத்தில் பல்வேறு விதமான சாப்ட்வேர்கள் இலவசமாகவோ அல்லது இயக்கிப்பார்த்து வாங்கிக்கொள்ள ஏற்ற வகையிலோ கிடைக்கின்றன.நம்மில் பலபேர் பலவிதமான இலவசமென்பொருள்களை இணையத்தில் இருந்து இறக்கி பயன்படுத்திவிட்டு தேவையில்லாதபட்சத்தில் அதனை அன் இன்ஸ்டால் செய்கின்றனர்.இருந்தபோதிலும் நாளாக நாளாக தேவையில்லாத பல மென்பொருள்கள் ஹார்டிஸ்க் இடத்தை நிரப்புவதோடு மட்டுமின்றி கணிணியின் வேகத்தினையும் குறைக்கிறது.இந்த குறையை நிவர்த்தி செய்ய டியூன் அப் யுட்டிலிட்டிஸ் என்ற மென்பொருளை பயன்படுத்திப்பாருங்கள்.இதில் கணிப்பொறியில் இயங்கத்தேவையான மென்பொருள்களை நாம் வகைப்படுத்திக்கொள்ளலாம்.கணிப்பொறி டெஸ்க்டாப்பை அழகுபடுத்திக்கொள்ளலாம்,கர்சர் மற்றும் ஐகான் ஆகியவற்றை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.Temp Internet files,Temp files ,undelete files ஆகியவற்றினை அழிக்க்வும் இம்மென்பொருள் உதவுகிறது.முயன்றுபாருங்கள்.
தரவிரக்க
இங்கே சொடுக்குங்கள்,சாவி பெற இங்கே சொடுக்குங்கள்


இன்றைய ஸ்பெஷல்:


ஹாரிபாட்டர் ஆங்கில நாவலின் கடைசி புத்தகம் இங்கே உங்களுக்காக இ.புத்தகவடிவில்
தரவிறக்கிகொள்ளவும்

Friday, April 18, 2008

பழங்கால கரன்சி -ஒரு பார்வை

தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களின் வடிவம் நாம் அறிந்ததே,முற்காலத்தில் ஆங்கில ஆதிக்கத்தில் நம் நாட்டில் புழங்கிய ரூபாய் நோட்டுக்களின் வடிவங்கள் மற்றும் அதன் விவரங்கள் உங்களுக்காக,


Victoria Portrait Series
The first set of British India notes were the 'Victoria Portrait' Series issued in denominations of 10, 20, 50, 100, 1000. These were unifaced, carried two language panels and were printed on hand-moulded paper manufactured at the Laverstock Paper Mills (Portals). The security features incorporated the watermark (GOVERNMENT OF INDIA, RUPEES, two signatures and wavy lines), the printed signature and the registration of the notes.

Rupees Ten



Rupees Hundered



British India Notes facilitated inter-spatial transfer of funds. As a security precaution, notes were cut in half. One set was sent by post. On confirmation of receipt, the other half was despatched by post.

Half note



This series remained largely unchanged till the introduction of the 'King's Portrait' series which commenced in 1923.

Green Underprint - Rupees Five Hundred



Green Underprint - Rupees Five



Red Underprint - Rupees Fifty
Small Denomination Notes!



The introduction of small denomination notes in India was essentially in the realm of the exigent. Compulsions of the first World War led to the introduction of paper currency of small denominations. Rupee One was introduced on 30th November, 1917 followed by the exotic Rupees Two and Annas Eight. The issuance of these notes was discontinued on 1st January, 1926 on cost benefit considerations. These notes first carried the portrait of King George V and were the precursors of the 'King's Portrait' Series which were to follow.
Rupee One - Obverse



Rupee One -Reverse


Rupees Two and Annas Eight - Obverse
King's Portrait Series


Regular issues of this Series carrying the portrait of George V were introduced in May, 1923 on a Ten Rupee Note. The King's Portrait Motif continued as an integral feature of all Paper Money issues of British India. Government of India continued to issue currency notes till 1935 when the Reserve Bank of India took over the functions of the Controller of Currency. These notes were issued in denominations of Rs 5, 10, 50, 100, 500, 1000, 10,000.
Rupees Fifty



Rupees One Thousand



The Bank's issues to January 1938 when the first Five Rupee note was issued bearing the portrait of George VI.

Rupees Five - First Note issued by Reserve Bank of India


This was followed by Rs 10 in February, Rs 100 in March and Rs 1,000 and Rs 10,000 in June 1938.
Rupees One Hundred



Rupees One Thousand



Rupees Ten Thousand



In August 1940, the one-rupee note was reintroduced, once again as a war time measure, as a Government note with the status of a rupee coin,
Rupee One Obverse



Rupee One Reverse



Rupees Two



As an added security feature, the security thread was introduced for the first time in India.
George VI Profile



George VI Frontal



The George VI series continued till 1947 and thereafter as a frozen series till 1950 when post independence notes were issued.


இன்றைய ஸ்பெஷல்:-

ஹாரிபாட்டர் ஆங்கில புத்தகத்தின் இ.வடிவம் இங்கே உங்களுக்காக, தரவிறக்கவும்

Wednesday, April 16, 2008

அரிய புகைப்படங்களின் தொகுப்பு பாகம் இரண்டு....

எளிமை,உழைப்பு,நன்றிமறவாமை அகியவற்றின் கலவை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்,அவர்களது காலத்தால் அழியாத அற்புத படங்களின் தொகுப்பு இது



















இதெப்படியிருக்கு........


இன்றைய ஸ்பெஷல்
ஹாரிப்பாட்டர் ஆங்கில நாவலின் ஐந்தாவது பாகம் இங்கே இ.புத்தக வடிவில் இங்கே தரவிறக்கவும்

Monday, April 14, 2008

அரிய புகைப்படங்களின் தொகுப்பு.......

புகைப்படம்
,அனைவருக்கும் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசை உண்டு,அது பிற்காலத்தில் நம்நினைவலைகளைப்பின்னோக்கி கொண்டு செல்ல பயன்படும் ஒர் அற்புத பொருள்.அப்படிப்பட்ட புகைப்படங்களின் தொகுப்புதான் இது.இங்கு தொகுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் கணிப்பொறித்துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் நிறுவனர்களின் புகைப்படங்கள்.

Steve Woznaik(sitting) and Steve Jobs of APPLE Computers.




Microsoft Corporation 1978 started Microsoft corporation




Linus Torvalds of Linux Operating System Linus Torvalds originally used the Minix OS on his system which he replaced by his OS.



Andreas Bechtolsheim , Bill Joy, Scott Mc Nealy and Vinod Khosla of SUN(StanfordUnivers ity Network) MicroSystems.



Gordon Moore(L) and Bob Noyce(R) ,founders of Intel




Larry Page(L) and Sergey Brin(R), founders of Google.



Ken Thompson (L)and Dennis Ritchie(R) ,creators of UNIX




Bill Hewlett(L) and Dave Packard(R) of HP




Tim Berners Lee -- Founder of the World Wide Web



இன்றைய ஸ்பெஷல்:-


ஹாரிபாட்டர்
ஆங்கில நாவலின் நான்காவது பாகத்தின் இ.புக் இங்கே தரவிறக்கவும்.

வீடியோக்களை தரவிரக்க......


இன்று எண்ணற்ற விடியோக்கள் இணையத்தில் உலாவவிடப்பட்டுள்ளன.விடியோக்களை தரவேற்றவென்றே இணையத்தில் யூ.டியூப் ,கூகுள் விடியோ என்று ஏகப்பட்ட தளங்கள் இணையத்தில் உலா வருகின்றன.உங்களுக்கு பிடித்தமான,ஆனால் பதிவிறக்கம் செய்ய வழிவகைசெய்யப்படாத பிளாஷ்,எம்.பி 4,என பார்க்க மட்டுமே அனுமதிக்கின்ற அனைத்து பைல்களினையும் தற்போது பலபேர் பலவிதமாக பதிவிறக்கம் செய்கின்றனர்.யூடியூப் மட்டுமன்றி அனைத்து தளங்களிலும் உள்ள மல்டி மீடியா பைல்களினையும் பதிவிறக்கம் செய்யலாம்.வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய உதவும் ஓர் முக்கிய தளம் www.keepvid.com .நமக்குப்பிடித்த விடியோக்கள் உள்ள பக்கத்தின் யூ ஆர் எல் முகவரியை காப்பி செய்து கொண்டு www.keepvid.com இணையதளத்திற்குச்சென்று மேற்படி யூ ஆர் எல் முகவரியை அளித்தால் பதிவிறக்கம் செய்ய லிங்க்கை keepvid இணையதளம் வழங்கும்.அப்படி வழங்கப்பட்ட லிங்க்கை கிளிக்செய்து தரவிறக்கம் செய்ய வேண்டியதுதான்.ஆனால் தரவிரக்கம் செய்யப்பட்ட ஃபைல் .doc என்று இருக்கும் அதை .Flv என்று மாற்றம் செய்ய வேண்டும்.மேற்படி மாற்றம் செய்யப்பட்ட ஃபைலினை FLV player கொண்டு நாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் வண்ணம் பார்க்கலாம்.

FLV player ஐ தரவிரக்க இங்கே சொடுக்குங்கள்

இன்றைய ஸ்பெஷல்:-

ஹாரிபாட்டர் நாவலின் மூன்றாவது பாகம் இங்கே ஆங்கிலத்தில் தரவிரக்க இங்கே சொடுக்குங்கள்

தமிழ் எழுத்துரு......


கணிணி நம் வாழ்க்கையில் பின்னி பிணைந்துவிட்ட ஒன்று.பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளீடு செய்வது மற்றும் வெளீயீடு செய்வது என்ற நிலை இருந்தபோதிலும் தமிழ் ஆர்வலர்களாகிய கணிப்பொறி வல்லுனர்களால் தமிழில் எழுத அவரவர் தேவைக்குத்தகுந்தார்போல் பல்வேறு விதமான எழுத்துருக்களை பயன்படுத்தி வருகின்றனர்,இதில் என்ன வேடிக்கை என்றால் எந்த எழுத்துருவும் பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்படுவதில்லை ஆதலால் ஒருவர் எந்த எழுத்துரு கொண்டு எழுதியுள்ளாரோ அதே எழுத்துரு கணிணியில் நிறுவப்பட்டிருந்தால் மட்டுமே மற்றொருவரால் அவரது கணிணியில் படிக்கமுடியும்.இதற்கு தீர்வாகத்தான் யுனிகோடு என்றழைக்கப்படக்கூடிய பொதுவானமுறை தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.யுனிகோடு முறையில் தமிழில் தட்டச்சு செய்ய இ.கலப்பை என்ற மென்பொருள் மிகவும் அதிகமாக பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இருப்பினும் என்.ஹைச்.எம்.(NHMwriter)என்ற மென்பொருள் மிக எளிதாகவும்,அனைவரும் பயன்படுத்த ஏற்ற வகையிலும் உள்ளது என்றால் அது மிகையில்லை.NHMwriter ல்Tamil99unicode,Tamilphoneticunicode,Tamiloldtypewriterunicode,Tamilbaminiunicode என நான்குவகை விசைப்பலகைகள் உபயோகிக்க ஏற்ற வகையில் உள்ளது.
நிறுவுவதும் மிகச்சுலபம்.NHMwriterஐ கணிப்பொறியில் நிறுவிய உடன் டாஸ்க்பாரின் வலதுபக்கத்தில் மணிபோன்ற அமைப்பு இருக்கும் அதனை வலது கிளிக் செய்ய மேற்கூறிய நான்குவகை விசைப்பலகைகள் தோன்றும்.தேவையான விசைப்பலகையை தேர்ந்தெடுத்து உங்களது எண்ணங்களை தமிழில் உள்ளீடலாம்.இது வலைத்தளங்களிலும் பயன்படுத்த எளிமையானது.
பயன்படுத்திபாருங்கள்.இங்கே தரவிறக்கவும்

மேலும் NHMwriterஐ பற்றி அறிய இங்கே சுட்டுங்கள்

இன்றைய ஸ்பெஷல்:-

ஹாரிபாட்டர் இரண்டாம்பாகம் ஆங்கிலத்தில் இங்கே தரவிறக்கவும்

Wednesday, April 9, 2008

போட்டோ சொல்லும் கதை.......

இந்த டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது.இன்று சந்தையில் பல்வேறு விதமான டிஜிட்டல் சமாச்சாரங்கள் கிடைக்கின்றன.அதில் முக்கியமானது கேமிரா.ஆம் பிலிம் ரோல் தேவையில்லை ,கையடக்கம் என பல்வேறு சாத்தியமான அம்சங்கள் உள்ள கேமிராக்கள் மிகக்குறைந்தவிலைக்கே சாதாரணமாக சந்தையில் கிடைக்கின்றன.
நம்மில் பலபேர் அக்கேமிராக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களினை சிடியாகவோ அல்லது போட்டோக்களாகவோ பிரதியெடுத்து வைத்திருப்போம்.மேற்படி கேமிராக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களினை அழகூட்டி நமக்குப்பிடித்த பாடல்களினைச்சேர்த்து அதை சிடியாகமாற்ற ஓர் அற்புதமான சாப்ட்வேர் உள்ளது.அதனை பயன்படுத்தி நம் டிஜிட்டல் கேமிராவில் எடுத்த புகைப்படங்களை மூவி போல மாற்றி வைத்துக்கொண்டால் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போதோ அல்லது பிற முக்கிய நிகழ்வுகள் வீட்டில் நிகழும்போதோ அறுவை நாடக நிகழ்ச்சிகளை பார்க்காமல் சிடியை போட்டு உறவினர்களினை மகிழ்விப்பதோடு நாமும் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்.முயன்று பாருங்களேன்.மேற்படி சாப்ட்வேரை தரவிரக்க இங்கே சொடுக்குங்கள்.
மற்றொரு இணைப்பு :-இங்கே சொடுக்குங்கள்

இன்றைய ஸ்பெஷல்:-
உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஹாரிபாட்டர் புத்தகத்தின் முதல் பாகம் இங்கே
ஆங்கிலத்தில்., தரவிறக்குங்கள்

Thursday, April 3, 2008

என்று தணியும்..............................................

உள்ளம் பதைபதைக்கிறது,தமிழ்நாட்டில் இருந்து பெங்களூராவிற்கு வேலைக்குச்சென்று அங்கு தங்கி பணிபுரியும் மகன் மற்றும் மகளினை நினைத்து பெற்றோர் படும் பாடு.ஏன் இந்த கலவரம்.. யாருக்கும் உதவாமல் வழிந்தோடி கடலிலே கலக்கும் காவேரி ஆற்றின் தண்ணீரை உருப்படியாக பயன்படுத்தி அருகில் உள்ள முன்னேற்றம் என்றால் என்ன?என்று கேட்கும் அளவிற்கு உள்ள தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய திட்டம் வகுத்து அதற்கு அடிக்கல் நாட்டிய பிறகு பிடித்தது கலவரம்?ஏன் கலவரம் சிந்தித்துப்பார்த்தால் ஒன்றே ஒன்று தான் காரணமாக புலப்படுகிறது.தேர்தல் ஆம் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயம் தேடுவதற்காக மக்களின் உணர்வுகளினை தூண்டி விடுவது தான் இத்தனைக்கும் காரணம் என்றால் அது மிகை இல்லை.பலன் என்ன ?பொருளாதார சீரழிவு மட்டுமே...
ஒகேனக்கல் யாருக்குசொந்தம்?
தமிழ்நாட்டிற்கு இது தமிழ் மக்களின் வாதம்..
கர்நாடகத்திற்கு இது கர்நாடக மக்களின் வாதம்..
ஆனால் அறுதியிட்டுச் சொல்ல வேண்டிய மத்திய அரசோ மவுனம் ஏனெனில் கர்நாடகத்தேர்தலை சந்திக்க வேண்டுமே?கர்நாடகத்திற்கு சொந்தம் என்றால் ஆட்சியையே காவு கொடுக்க வேண்டும் தமிழக முதலமைச்சர் கோபத்திற்கு ஆளாக வேண்டுமே(இப்போது தான் இரு ராஜ்ய சபா சீட்டுக்களை வழங்கியுள்ளாரே)தமிழகத்திற்கு சொந்தம் என்றால் க்ர்நாடகாவில் காங்கிரஸ் என்றோரு பிளாக் போடவேண்டும்(இப்போது தான் காங்கிரஸை வளர்க்க மராட்டியத்திலிருந்து கவர்னரை முன்னாள் முதலமைச்சரை அனுப்பியுள்ளார்கள்(எஸ்.எம்.கிருஷ்ணா).,ஆகவே தான் மவுனம்.
இதற்கு முடிவு தான் என்ன?
மாநிலக்கட்சிகள் தனி மத்திய கட்சிகள் தனியாக இருக்க வேண்டும் ..
கூட்டணி ஆட்சி என்ற பெயரில் மாநிலத்தில் எதிர்கட்சி மத்தியில் தோழமை கட்சி என இரட்டை வேடம் கூடாது?
தேர்தலுக்கு முன் வைத்துள்ள கூட்டணியே தேர்தலுக்குப்பின்னும் இருக்க வேண்டும்?கூட்டணி மாற அனுமத்திக்க கூடாது?
முக்கியமாக ஓட்டினை கட்டாயமாக்கவேண்டும்.
முக்கியமாக ஒன்று ஒகனேக்கல் கூட்டு குடிநீர்த்திட்டம் நிறைவேற்றப்படுவது பற்றி தமிழக மக்களோ,அல்லது கர்நாடக மக்களோ அமைதியாக இருந்தாலும் அரசியல்வாதிகள் சும்மா இருக்கமாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம்.என்று தணியும்..............................................

இன்றைய ஸ்பெஷல்:
குழந்தை பெயர்கள்:-இங்கே தரவிறக்குங்கள்
அடோப் போட்டோ ஷாப் தமிழில் இ புத்தகமாக இங்கே தரவிறக்குங்கள்