Thursday, April 3, 2008

என்று தணியும்..............................................

உள்ளம் பதைபதைக்கிறது,தமிழ்நாட்டில் இருந்து பெங்களூராவிற்கு வேலைக்குச்சென்று அங்கு தங்கி பணிபுரியும் மகன் மற்றும் மகளினை நினைத்து பெற்றோர் படும் பாடு.ஏன் இந்த கலவரம்.. யாருக்கும் உதவாமல் வழிந்தோடி கடலிலே கலக்கும் காவேரி ஆற்றின் தண்ணீரை உருப்படியாக பயன்படுத்தி அருகில் உள்ள முன்னேற்றம் என்றால் என்ன?என்று கேட்கும் அளவிற்கு உள்ள தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய திட்டம் வகுத்து அதற்கு அடிக்கல் நாட்டிய பிறகு பிடித்தது கலவரம்?ஏன் கலவரம் சிந்தித்துப்பார்த்தால் ஒன்றே ஒன்று தான் காரணமாக புலப்படுகிறது.தேர்தல் ஆம் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயம் தேடுவதற்காக மக்களின் உணர்வுகளினை தூண்டி விடுவது தான் இத்தனைக்கும் காரணம் என்றால் அது மிகை இல்லை.பலன் என்ன ?பொருளாதார சீரழிவு மட்டுமே...
ஒகேனக்கல் யாருக்குசொந்தம்?
தமிழ்நாட்டிற்கு இது தமிழ் மக்களின் வாதம்..
கர்நாடகத்திற்கு இது கர்நாடக மக்களின் வாதம்..
ஆனால் அறுதியிட்டுச் சொல்ல வேண்டிய மத்திய அரசோ மவுனம் ஏனெனில் கர்நாடகத்தேர்தலை சந்திக்க வேண்டுமே?கர்நாடகத்திற்கு சொந்தம் என்றால் ஆட்சியையே காவு கொடுக்க வேண்டும் தமிழக முதலமைச்சர் கோபத்திற்கு ஆளாக வேண்டுமே(இப்போது தான் இரு ராஜ்ய சபா சீட்டுக்களை வழங்கியுள்ளாரே)தமிழகத்திற்கு சொந்தம் என்றால் க்ர்நாடகாவில் காங்கிரஸ் என்றோரு பிளாக் போடவேண்டும்(இப்போது தான் காங்கிரஸை வளர்க்க மராட்டியத்திலிருந்து கவர்னரை முன்னாள் முதலமைச்சரை அனுப்பியுள்ளார்கள்(எஸ்.எம்.கிருஷ்ணா).,ஆகவே தான் மவுனம்.
இதற்கு முடிவு தான் என்ன?
மாநிலக்கட்சிகள் தனி மத்திய கட்சிகள் தனியாக இருக்க வேண்டும் ..
கூட்டணி ஆட்சி என்ற பெயரில் மாநிலத்தில் எதிர்கட்சி மத்தியில் தோழமை கட்சி என இரட்டை வேடம் கூடாது?
தேர்தலுக்கு முன் வைத்துள்ள கூட்டணியே தேர்தலுக்குப்பின்னும் இருக்க வேண்டும்?கூட்டணி மாற அனுமத்திக்க கூடாது?
முக்கியமாக ஓட்டினை கட்டாயமாக்கவேண்டும்.
முக்கியமாக ஒன்று ஒகனேக்கல் கூட்டு குடிநீர்த்திட்டம் நிறைவேற்றப்படுவது பற்றி தமிழக மக்களோ,அல்லது கர்நாடக மக்களோ அமைதியாக இருந்தாலும் அரசியல்வாதிகள் சும்மா இருக்கமாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம்.என்று தணியும்..............................................

இன்றைய ஸ்பெஷல்:
குழந்தை பெயர்கள்:-இங்கே தரவிறக்குங்கள்
அடோப் போட்டோ ஷாப் தமிழில் இ புத்தகமாக இங்கே தரவிறக்குங்கள்

No comments: