Friday, May 30, 2008

மாற்றம் தேவை....

என் மனத்தினை குடைந்து கொண்டுஇருக்கக்கூடிய ஒரு விஷயத்தினை இந்த பதிவில் பதிவு செய்ய உள்ளேன்.

ஆகஸ்ட் 15 1947 ஆம் வருடம் நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம்.சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் கழிந்தாலும் நம் நடைமுறைகளோ,பழக்கவழக்கங்களோ இன்ணும் மாற்றம் அடையவில்லை.வளரும் நாடுகள் பட்டியலில் இருந்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கின்றோம்.வளரவில்லை.காரணம் எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ளாத மனம்.பொறுப்புக்களினை தட்டிக்கழிப்பது இது தான் இன்று நடைமுறையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளில் நாம் சாதித்தது என்ன?இந்திய கண்டுபிடிப்புத்தான் விடையாகவரும்.ஆம் பூஜ்யம் தான்.

எந்த வளமும் இல்லாத சிங்கப்பூர் மக்களின் பேராதரவுடனும்,உழைக்கும் சிந்தனையுடனும்,ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடனும் ,சாதித்துக்காட்டவேண்டும் என்ற வெறியுடனும்,அரசியல்வாதிகளின் சுயநலமில்லா போக்குடனும் இன்று முன்னேறிய நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.ஆனால் இந்தியா ஊழலிலும்,அரசியல் சாத்தான்களின் பிடியிலும் சிக்கித்தவிக்கிறது.

காரணம் பழமை பேசியே காலம் தள்ளும் நாம் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக உள்ளோம்.
இதை தவிர்க்கவும் தடுக்கவும் என்ன வழி.எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இப்போதே அதனைப்பற்றிய சிந்தனைகளினைப்போதிப்பதும்,ஆக்கப்பூர்வமான சிந்தனைகளினை ஊக்கப்படுத்துவதும் செய்யவேண்டும்.அனைவருக்கும் கல்வி,படிப்பறிவற்ற நாடாக மாற்றுவோம் என பறைசாற்றப்படும் எதுவும் ஒழுங்காக செயல்படுத்தப்படுகின்றதா என்றால் இல்லை.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் நகராட்சிகளில் வசூலிக்கப்படும் கல்வி வரி முழுமையாக கல்வி வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படுகின்றதா?என்று வினா எழுப்பி விடை தேடியது ஒரு தன்னலமில்லா சேவை செய்யும் ஓர் அமைப்பு.அவர்களுக்கு கிடைத்த விடைகள் வேடிக்கையிலும் வேடிக்கை.கல்வி வரி பெரும்பாலான நகராட்சிகளில் கல்வி வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படவில்லை,அத்தொகை முழுவதும் மாற்றுப்பணிகளுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.என்ன வேடிக்கை பாருங்கள்.

தற்போது அனைத்து தர மக்களும் தம் குழந்தைகளினை மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலேயே சேர்க்க விரும்புகின்றனர்.ஆனால் அரசு பள்ளிகளில் தரமும் இல்லை ,கண்காணிப்பும் இல்லை.முன்னேற்றம் செய்ய முயற்சியும் இல்லை.

என்று முன்னேறுமோ.........ஆதங்கப்படுகின்றேன்.


இன்றைய ஸ்பெஷல்:-

இராஜன் முருகவேல் எழுதிய ஐஸ்கிரீம் சிலையே நீதானோ சிறுகதை தமிழில் இங்கே உங்களுக்காக
தரவிரக்க