Sunday, May 11, 2008

எனக்குப்பிடித்த பாடல்களின் தொகுப்பு 3......

இனிய பாடல்களின் மூன்றாவது தொகுப்பு உங்களுக்காக

புலமைப்பித்தனின் வரிகளில் ஜேசுதாஸின் அற்புதகுரலில் எம்.ஜி.ஆரின் நடிப்பில் உருவான உள்ளத்தினைக்கொள்ளைகொள்ளும் பாடல்.


பாடல்: இந்தப் பச்சைக் கிளிக்கொரு
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: புலமைப்பித்தன்

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன் - அதில்
பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன் - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட

(இந்தப்)

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - பின்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)

தூக்கமருந்தினைப் போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள் - நோய்
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள் (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)

ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் - தினம்
நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம் (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)

பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை - நல்ல
பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)


மேற்காணும் பாடலை தரவிரக்க இங்கே முயலலாம்


____________________________________________________________________________________

உனக்கு நான் சளைத்தவரா என எஸ்.பி.பியும் எஸ்.ஜானகியும் போட்டிபோட்டு பாடிய அற்புதப்பாடல் இதுவன்றோ


பாடல்: ஓ வசந்த ராஜா
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
வரிகள்: வைரமுத்து


ஓ வசந்த ராஜ தேன் சுமந்த ரோஜா
என் தேகம் உன் தேசம் என்னாளும் சந்தோஷம் - என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

(ஓ வசந்த)

வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ கண்ணே (2)
சூடிய பூச்சரம் வானவில்தானோ?

(ஓ வசந்த)

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு (2)
மன்மதக் கோயிலில் பாலபிஷேகம்

(ஓ வசந்த)



மேற்காணும் பாடலை தரவிரக்க இங்கே முயலலாம்

__________________________________________________________________________________

புண்பட்ட இதயத்திற்கு இதமான இப்பாடலினை வாலி இயற்றியிருந்தாலும் அற்புத குரலால் எஸ்.பி.பியும் நடிப்பில் அரவிந்த்சாமியும் அதற்கு மெருகூட்டியுள்ளனர்.


பாடல்: நலம் வாழ என்னாளும்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி


நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்

(நலம் வாழ)

மனிதர்கள் சிலனேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே

(நலம் வாழ)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்...

(நலம் வாழ)


மேற்காணும் பாடலை தரவிரக்க இங்கே முயலலாம்

______________________________________________________________________________________

இன்றைய ஸ்பெஷல்:-

மர்மக்கதை மன்னன் ஷெர்லக்ஹோம்ஸ் அவர்களின் கதை இங்கே மின்புத்தகமாக உங்களுக்காக.,தரவிரக்கிக்கொள்ளவும்