Wednesday, May 14, 2008

வெயில்....சில தகவல்கள்......

இந்தியாவில் கோடைகாலம் என வரையருக்கப்பட்ட மாதங்கள் ஏப்ரல் மற்றும் மே.தற்போது கோடை வெயில் வாட்டிஎடுத்து வருகிறது.பகல் நேரங்களில் கூட மக்கள் வெளியே நடமாட பயப்படுகிறார்கள்.அதிகாலையிலேயே வெப்பம் துவங்கி இருட்டிய பிறகும் புழுக்கம் தருகிற வகையில் சூரியன் சுள்ளென சுட்டெரிக்கின்றான். நமக்கு மட்டும் தான் இந்த கடும் வெயிலா உலகநாடுகள் பலவற்றிலும் உண்டு என்றால் அது நிஜம் தான்.அது பற்றிய சில முக்கிய தகவல்களினை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாயுள்ளேன்.

உலகில் பதிவான அதிக பட்ச அளவு 136 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.பதிவான இடம் வட ஆப்ரிக்காவில் உள்ள லிபியா நாட்டில் உள்ள “அல்-அஸிஸியா” என்ற பாலைவனப்பகுதி.இதுவே இன்று வரை உலகில் பதிவான அதிக பட்ச வெப்ப அளவாகும்.

அமெரிக்கா குளிர் பிரதேசமாக அடையாளப்படுத்தப்படினும் அங்கேயும் பல மாகாணங்களில் வெப்பம் அதிக அளவில் பதிவான வரலாறு உண்டு.1913 ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் “டெத் வேலி” என்ற பாலைவனப்பகுதியில் அடித்த வெப்பத்தின் அளவு அதிகமில்லை 134 டிகிரி பாரன்ஹீட் மட்டுமே.இது உலகின் அதிகபட்ச வெப்பநிலையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்று நான் கூறத்தேவையில்லை.

ஆசியாவில் அதிகபட்ச வெப்பம் பதிவான நாடு இஸ்ரேல்.பதிவான ஆண்டு 1942.பதிவான வெப்ப அளவு 129 டிகிரி பாரன்ஹீட்.

ஆஸ்ரேலியாவில் டிசம்பர் இறுதி முதல் மார்ச் இறுதி வரை கோடைகாலம் வருகிறது.1989ல் குயுன்ஸ்லாண்ட் நகரத்தில் பதிவான 128 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தான் ஆஸ்ரேலியாகண்டம் அனுபவித்த உயர்ந்தபட்ச வெப்பம்.

கனடாவில் வாழ்பவர்கள் 1937ல் அனுபவத்த 113 டிகிரி பாரன்ஹீட்வெப்ப அளவையே அவர்கள் அதிர்ச்சியுடன் நினைவு கூர்வார்கள்.

அயர்லாந்து,ஸ்வீடன்,நார்வே,பின்லாந்து ஆகிய நாடுகளில் இன்று வரை உச்சபட்ச வெப்பம் மூன்று இலக்க அளவைத்தொடவில்லை.அயர்லாந்து சந்தித்த உயர்ந்த பட்ச வெப்பம் உலகநாடுகள் சந்தித்த உயர்ந்த பட்ச வெப்ப பட்டியலில் கடைசியில் உள்ளது.1887ல் அந்நாடு சந்தித்த 91 டிகிரி தான் அந்நாடு சந்தித்த உயர்ந்தபட்ச வெப்பமாகும்.

நாடுகள் அடிப்படையில் அயர்லாந்து கடைசி இடத்தில் இருந்தாலும் நிலம் அடிப்படையில் அண்டார்டிக்கா தான் உலகில் குறைவான வெப்பத்தினை சந்திக்கும் நிலப்பரப்பாகும்.அண்டார்டிக்க சந்தித்த அதிகபட்ச வெப்பம் 15 டிகிரி சந்தித்த ஆண்டு 1974ஆம் ஆண்டு.

ஐரோப்பிய நாடுகள் ஆகஸ்ட்டில் கோடைகாலத்தினை சந்திக்கின்றன.குளிர்காலத்தில் நாம் சந்திக்கின்ற வெயில் அளவைக்கூட கோடைகாலத்தில் அந்நாடுகள் சந்திப்பதில்லை.நமது குளிர்கால வெப்பத்தினை விட அவர்களின் கோடைகால வெப்பம் இருக்கின்றது.ஆனால் ஸ்பெயினில் மட்டும் 122 டிகிரி வரை வெப்பம் சென்றுள்ளது.

2003ல் ஐரோப்பிய நாடுகள் சந்தித்த அதிகபட்ச வெயிலினால் சுமார் 35 ஆயிரம் பேர் தங்கள் உயிர்களினை பறிகொடுத்துள்ளனர்.அதில் அதிகபட்சமாக பிரான்சில் மட்டுமே சுமார் பதினைந்தாயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர்.அப்படியென்ன வெப்ப அளவு என்கிறீர்களா?104 டிகிரி தான்.அதையே அவர்களால் தாங்க முடியவில்லை.

இங்கிலாந்தில் அந்த ஆண்டு தான் முதல் முறையாக மூன்று இலக்க அளவினை வெப்பம் எட்டிப்பார்த்தது.அதனால் 900 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் அதிகபட்ச வெப்பம் எவ்வளவு தெரியுமா? 123 டிகிரி தான்
பாக்கிஸ்தானில் அதிகபட்ச வெப்பம் எவ்வளவு தெரியுமா? 120 டிகிரி தான்

இந்தியாவில் கோடைகால சராசரி வெப்பம் 104 டிகிரி என்று கூறப்படுகிறது.இந்தியாவில் அதிகபட்ச வெப்பம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் அதிக பட்ச வெப்பம் வட இந்தியாவில் தான் பதிவாகிறது.


இன்றைய ஸ்பெஷல்:-
ஓவியம் வரையாத தூரிகை என்ற அனார் எழுதிய கவிதைத்தொகுப்பு தமிழில் சிறு மென்புத்தகமாக இங்கே தரவிரக்கவும்