Sunday, May 11, 2008

எனக்குப்பிடித்த பாடல் தொகுப்பு 2.......

பாடல்களின் அணிவரிசையின் இரண்டாம் பாகம் இதோ உங்களுக்காக...

வைரமுத்துவின் வைரவரிகளினால் இப்பாடல்கள் புகழ்பெற்றனவா? அல்லது எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியதால் இப்பாடல்கள் புகழ்பெற்றனவா?யாமறியேன் பராபரமே...


பாடல்: பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

(பனிவிழும்)

சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைகளில் நெளிகயில் இடைவெளி குறைகயில்
எரியும் விளக்குச் சிரித்து கண்கள் மூடும்

(பனிவிழும்)

காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் ஹ ஹா பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
???? நினைவிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி குளிர்கயில்
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

(பனிவிழும்)

மேற்படி பாடலினை தரவிரக்க இங்கே முயலுங்கள்


___________________________________________________________________________________


பாடல்: நீதானே எந்தன் பொன்வசந்தம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் இன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் அன்னேரம்

(நீதானே)

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் வேளையில் ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையினில் தென்றல் கவரிகள் வீசும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் என்னாளும்

(நீதானே)

ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் கோடி நினைவு
உன் ஆசை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் பேசும் மொழிகளில் பிறையும் பௌளர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் என்னாளும்

(நீதானே)


மேற்படி பாடலினை தரவிரக்க இங்கே முயலுங்கள்


______________________________________________________________________________________


பாடல்: ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
வரிகள்: வைரமுத்து

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்

(ரோஜாவைத்)

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
மௌளனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ஆ ஆ

(ரோஜாவைத்)

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்
பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள் மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ

(ரோஜாவைத்)


மேற்படி பாடலினை தரவிரக்க இங்கே முயலுங்கள்

_____________________________________________________________________________________

இன்றைய ஸ்பெஷல்:-

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று காவியம் மென்புத்தகமாக இங்கே உங்களுக்காக.