Friday, May 30, 2008

மாற்றம் தேவை....

என் மனத்தினை குடைந்து கொண்டுஇருக்கக்கூடிய ஒரு விஷயத்தினை இந்த பதிவில் பதிவு செய்ய உள்ளேன்.

ஆகஸ்ட் 15 1947 ஆம் வருடம் நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம்.சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் கழிந்தாலும் நம் நடைமுறைகளோ,பழக்கவழக்கங்களோ இன்ணும் மாற்றம் அடையவில்லை.வளரும் நாடுகள் பட்டியலில் இருந்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கின்றோம்.வளரவில்லை.காரணம் எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ளாத மனம்.பொறுப்புக்களினை தட்டிக்கழிப்பது இது தான் இன்று நடைமுறையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளில் நாம் சாதித்தது என்ன?இந்திய கண்டுபிடிப்புத்தான் விடையாகவரும்.ஆம் பூஜ்யம் தான்.

எந்த வளமும் இல்லாத சிங்கப்பூர் மக்களின் பேராதரவுடனும்,உழைக்கும் சிந்தனையுடனும்,ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடனும் ,சாதித்துக்காட்டவேண்டும் என்ற வெறியுடனும்,அரசியல்வாதிகளின் சுயநலமில்லா போக்குடனும் இன்று முன்னேறிய நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.ஆனால் இந்தியா ஊழலிலும்,அரசியல் சாத்தான்களின் பிடியிலும் சிக்கித்தவிக்கிறது.

காரணம் பழமை பேசியே காலம் தள்ளும் நாம் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக உள்ளோம்.
இதை தவிர்க்கவும் தடுக்கவும் என்ன வழி.எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இப்போதே அதனைப்பற்றிய சிந்தனைகளினைப்போதிப்பதும்,ஆக்கப்பூர்வமான சிந்தனைகளினை ஊக்கப்படுத்துவதும் செய்யவேண்டும்.அனைவருக்கும் கல்வி,படிப்பறிவற்ற நாடாக மாற்றுவோம் என பறைசாற்றப்படும் எதுவும் ஒழுங்காக செயல்படுத்தப்படுகின்றதா என்றால் இல்லை.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் நகராட்சிகளில் வசூலிக்கப்படும் கல்வி வரி முழுமையாக கல்வி வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படுகின்றதா?என்று வினா எழுப்பி விடை தேடியது ஒரு தன்னலமில்லா சேவை செய்யும் ஓர் அமைப்பு.அவர்களுக்கு கிடைத்த விடைகள் வேடிக்கையிலும் வேடிக்கை.கல்வி வரி பெரும்பாலான நகராட்சிகளில் கல்வி வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படவில்லை,அத்தொகை முழுவதும் மாற்றுப்பணிகளுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.என்ன வேடிக்கை பாருங்கள்.

தற்போது அனைத்து தர மக்களும் தம் குழந்தைகளினை மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலேயே சேர்க்க விரும்புகின்றனர்.ஆனால் அரசு பள்ளிகளில் தரமும் இல்லை ,கண்காணிப்பும் இல்லை.முன்னேற்றம் செய்ய முயற்சியும் இல்லை.

என்று முன்னேறுமோ.........ஆதங்கப்படுகின்றேன்.


இன்றைய ஸ்பெஷல்:-

இராஜன் முருகவேல் எழுதிய ஐஸ்கிரீம் சிலையே நீதானோ சிறுகதை தமிழில் இங்கே உங்களுக்காக
தரவிரக்க

Tuesday, May 27, 2008

கண்களும் கவிபாடுதே....பாகம் 2

அன்பர்களே எனது முந்தைய பதிவில் கண்கள் செய்யும் குறும்புகளினை தொகுத்திருந்தேன்.அதனை தாங்கள் இரசித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.அதன் தொடர்ச்சியை இப்பதிவில் வழங்கியுள்ளேன்.இரசியுங்கள் உங்கள் கருத்துக்களினை உள்ளீடுங்கள்.

win goblet or two faces



yellow circle



young lady or woman




Tough Colour Test



Triangle Illusion



Two shade of green




where is a dog




which way the window face



இன்றைய ஸ்பெஷல்:-

இலந்தை சு.இராமசாமி அவர்கள் எழுதிய கிரஹாம்பெல் வாழ்க்கை தமிழில் மென்புத்தகமாக இங்கே தரவிறக்கவும்.

Thursday, May 22, 2008

கண்கள் செய்யும் வித்தை.....

கண்கள் உங்களை ஏமாற்றுவதினையும்,கண்கள் உங்களின் தொலைநோக்குப்பார்வையை பலபடுத்துவதினையும் உறுதி செய்ய இப்படத்தொகுப்பை பாருங்கள்.

How many Black Dots do you see




How many legs do you see




lightbulb illusion_see and see white area bulb will blow


perplexing illusion




duck or a bunny



Find the missing people there are nine people


Freaky Spiral


A musician or a girl



A skull or a couple



ABC or 123




Amazing opticl illusion_black will shirnk while see




Black shape or word



இன்றைய ஸ்பெஷல்:-

டி.என்.பி.எஸ்.சியின் பொது அறிவு வினா-விடை தொகுப்பு இ.புத்தகம் இங்கே உங்களுக்காக இங்கே தரவிறக்கவும்.

Saturday, May 17, 2008

கோடைகாலம்.....ஓர் நினைவு



ஜூன் முதல் மார்ச் வரை பள்ளிக்கு போய் படித்து மார்ச் இறுதியில் பள்ளிஇறுதித்தேர்வுகள் முடிந்த கையோடு இரு மாதங்கள் கோடைவிடுமுறையைக்கழித்த காலங்களினை பின்னோக்கித்திரும்பி பார்க்கின்றேன்.

என்ன இனிமை! சாதாரணமாகவே காலாண்டு விடுமுறை,அரையாண்டு விடுமுறை ஆகியவை சில நாட்களே ஆனாலும் அந்நாட்களிலே விளையாட்டு என்று கூதூகலப்பட்டவர்கள் முழுவாண்டு விடுமுறையை எப்படி நன்கு கழித்து கூதூகலப்பட்டிருப்போம்.

அந்த இனிமை தற்போது உள்ள குழந்தைகளுக்கு கிடைக்கிறதா? இல்லை என்பதுதான் உண்மை.

கோடைகால வெயிலை குழந்தைகள் தாங்காது என்பதால் தான் பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது.பூமி சூரியனுக்கு அருகில் வரக்கூடிய காலகட்டம் ஏப்ரல் ,மே மாதங்கள் என்பதால் சூரிய ஒளிக்கற்றைகளிலிருந்து குழந்தைகளினைக்காக்க விடுமுறைவிடப்படுகிறது.

குளிர்பிரதேசங்களுக்குச்செல்லவோ அல்லது இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள இடங்களுக்குச்செல்லவோ?அல்லது உறவினர்கள் வீட்டிற்குச்சென்று உறவுகளினைப்பலப்படுத்தவோ கோடைகால விடுமுறையை பயன்படுத்தியதுண்டு.

தற்போதையக் குழந்தைகள் விடுமுறை நாட்களினை மேற்படி வழிமுறைகளிலோ அல்லது விளையாட்டுக்களிலோ கழிக்கின்றார்களா?என்றால் அது இல்லை.கோடைகாலங்களில் தான் அவர்கள் பள்ளிக்குச்சென்றுவந்த நாட்களினை விட பிஸியாக உள்ளனர்.ஆம்.சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் அவர்களினை காலை முதல் இரவு வரை பல்வேறு வகுப்புகளில் சேர்த்து அவர்களின் குழந்தைப்பருவ இனிமைகள் தட்டிப்பறிக்கப்படுகின்றன.

முன்பெல்லாம் தெருவில் குழந்தைகள் செல்லாங்குச்சி(கிட்டிப்புள்),பம்பரம்,கோலி,கபட்,7கல்விளையாட்டு,கண்ணாம்பூச்சி,போன்ற பல் பல விளையாட்டுக்களினை கால நேரங்களுக்குத்தக்க விளையாடுவார்கள்.விளையாடியிருக்கிறோம்.இப்போதுள்ள குழந்தைகள் அதுபற்றி எல்லாம் அறிவார்களா?..என் செய்ய கால ஓட்டம் அனைத்து இனிமைகளினையும் மாற்றி அமைக்கின்றது.

பெற்றோர்கள் அதனை அறிந்து தாங்கள் அனுபவித்த அந்த இனிமையான குழந்தைப்பருவ வாழ்க்கையினை தங்கள் குழந்தைகளுக்கும் ஏற்படுத்தித்தருவார்களா?
பார்க்கலாம்.

சூரியனைப்பற்றி சில தகவல்கள் இங்கே உங்களுக்காக.






Observation data

Mean distance
from Earth 1.496×1011 m
8.31 min at light speed
Visual brightness (V) −26.74m [1]
Absolute magnitude 4.83m [1]
Spectral classification G2V
Metallicity Z = 0.0177[2]
Angular size 31.6' - 32.7' [3]
Adjectives solar

Orbital characteristics

Mean distance
from Milky Way core ~2.5×1020 m
26,000 light-years
Galactic period 2.25–2.50×108 a
Velocity ~2.20×105 m/s
(orbit around the center of the Galaxy)
~2×104 m/s
(relative to average velocity of other stars in stellar neighborhood)

Physical characteristics

Mean diameter 1.392×109 m [1]
109 Earths
Equatorial radius 6.955×108 m [4]
109 x that of Earth[4]
Equatorial circumference 4.379×109 m [4]
109 x that of Earth[4]
Flattening 9×10−6
Surface area 6.0877×1018 m² [4]
11,990 Earths[4]
Volume 1.4122×1027 m³ [4]
1,300,000 Earths
Mass 1.9891 ×1030 kg[1]
332,946 Earths
Average density ≈1.409 ×103 kg/m³[4][1][5]
Different Densities Core: 1.5×105 kg/m³
lower Photosphere: 2×10-4 kg/m³
lower Cromosphere: 5×10-6 kg/m³
Avg. Corona: 10×10-12kg/m³[6]
Equatorial surface gravity 274.0 m/s2 [1]
27.94 g
28 x Earth's surface gravity[4]
Escape velocity
(from the surface) 617.7 km/s [4]
55 x Earths[4]
Temperature
of surface (effective) 5,778 K [1]
Temperature
of corona ~5×106 K

Temperature
of core ~15.7×106 K [1]
Luminosity (Lsol) 3.846×1026 W [1]
~3.75×1028 lm
~98 lm/W efficacy
Mean Intensity (Isol) 2.009×107 W m-2 sr-1

Rotation characteristics

Obliquity 7.25° [1]
(to the ecliptic)
67.23°
(to the galactic plane)
Right ascension
of North pole[7] 286.13°
19 h 4 min 30 s
Declination
of North pole +63.87°
63°52' North
Sidereal Rotation period
(at 16° latitude) 25.38 days [1]
25 d 9 h 7 min 13 s[7]
(at equator) 25.05 days [1]
(at poles) 34.3 days [1]
Rotation velocity
(at equator) 7.284 ×103 km/h

Photospheric composition (by mass)

Hydrogen 73.46 %[8]
Helium 24.85 %
Oxygen 0.77 %
Carbon 0.29 %
Iron 0.16 %
Sulfur 0.12 %
Neon 0.12 %
Nitrogen 0.09 %
Silicon 0.07 %
Magnesium 0.05 %




இன்றைய ஸ்பெஷல்:-

”அத்தனைக்கும் ஆசைப்படு”சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய தன்னம்பிக்கை நூல் தமிழில் மென்புத்தகமாக இங்கே உங்களுக்காக .தரவிறக்க

Thursday, May 15, 2008

நியாயம் தானா?......


கல்வி.கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது முன்னோர் வாக்கு.கல்லாமல் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் எண்ணம் எல்லாம் தனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து நல்ல நிலையை அடைவதினை பார்க்க வேண்டும் என்பதே.இதனை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

கல்வி இன்று வியாபாரம் ஆகிவிட்டது.ஆம் அனைத்து அரசியல்வாதிகளும் தாங்கள் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்திருப்பது கல்விக்கூடங்களில் தான்.பொது நலத்தோடு ஆரம்பிக்கின்றோம் என்று ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் குழந்தைகளைச் சேர்ப்பதற்குள் பேற்றோருக்கு போதும் போதும் என்றாகிவிடுகின்றது.சாதாரண ஏழை பெற்றோரும் தங்கள் குழந்தைகளை ஆங்கிலம் கற்பிவிக்கும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சேர்க்கும் எண்ணம் தான் தற்போது மேலோங்கி வருகிறது.

ஆனால் தமிழகத்தினை ஆளும் கட்சிகள் தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது.எப்படி என்றால் மத்திய அரசால் "ஜவஹர் நவோதயா வித்யாலயா”என்ற உண்டு உறைவிடப்பள்ளி ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசால் நிறுவப்பட்டு ஆறம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மாணவ,மாணவிகள் சேர்க்கப்பட்டு தலை சிறந்த ஆசிரியர்களால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர்.அவர்களுக்கான அனைத்து செலவுகளும் மத்திய அரசால் மனித மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.மாணவர்கள் அணியும் செருப்பு முதல் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுடன் அவர்களின் திறமைக்கேற்ப மற்ற துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகின்றது.இப்படிப்பட்ட பள்ளிகள் நிறுவ அனுமதி வழங்கப்படவில்லை.காரணமாகக் கூறப்படுவது மேற்படி பள்ளிகளில் இந்தி மொழி திணிப்பு நடந்து விடுமாம்.காரணம் வேடிக்கையாக இல்லை.மக்களை ஏமாற்றும் முயற்சி அல்லவா? எந்த குடிமகன் மேற்படி பள்ளி வேண்டாம் என்று ஆளும் அரசியல் தலைவர்களிடம் போய் முறையிட்டார் என்று தெரியவில்லை.மேற்படி பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டால் அரசியல்வாதிகளினால் ஆரம்பிக்கப்பட்ட் பள்ளிகள் ஆட்டம் கண்டு விடும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஒவ்வோர் ஆண்டும் எத்தனை மாணவர்கள் மேற்படி நல்ல வாய்ப்பினை இழக்கின்றார்கள்.அத்தோடு மட்டுமில்லாமல் ஆசிரியர் ஆகவேண்டும் என்ற கனவுடன் இருக்கும் எத்தனை இளைஞர்,இளைஞிகள் வாய்ப்புகளினை இழக்கின்றார்கள்.இதில் வேடிக்கை அம்சம் என்னவென்றால் பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்த உண்டு உறைவிடப்பள்ளிகளில் தமிழ் மாநிலத்தினைச்சார்ந்த பலர் பணியில் உள்ளனர்.

தமிழ்மொழி பற்றி பெருமை பேசும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் நல்ல ஆங்கிலம் மற்றும் இந்தி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் மட்டும் தான் சேர்க்கப்படுகின்றனர்.(எம் பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தி மொழியில் தானே பேரம் பேசினால் எடுபடும்)மக்களினைப்பற்றி அவர்களுக்கு கவலை ஏது?


இந்தி மொழி திணிப்பு என்ற காரணத்தினைச் சொல்பவர்கள் மத்திய அரசினை நிர்பந்தித்து தமிழினை முதன்மைப்பாடமாகக்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு ஜவஹர் நவதோதயா வித்யாலயா பள்ளிகளை அமைக்க அனுமத்திக்கலாமே.அனைத்தும் முடிந்தது இது மட்டும் முடியவில்லையா?காரணம் எளிதாக விளங்குகின்றதா?

ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசு தமிழக அரசிடம் அனுமதி கோருகிறது.ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது.இது தமிழக மக்களுக்குச்செய்யும் துரோகம் அன்றோ?

தமிழக அரசு தமிழக மக்களினை வஞ்சிப்பது புலனாகிறதா?

எனது இவ்வாதங்கம் நியாயமானதா? உங்கள் கருத்துகளினை உள்ளீடுங்கள்...

மேலும் ஜவஹர் நவதோதயா வித்யாலயா பள்ளிகளைப்பற்றி அறிய இங்கு சொடுக்குங்கள்

இன்றைய ஸ்பெஷல்:-

மரியாதை ராமன் கதைகள் இங்கே உங்களுக்காக தமிழில் சிறு மின் புத்தகமாக இங்கே தரவிரக்கவும்.

Wednesday, May 14, 2008

வெயில்....சில தகவல்கள்......

இந்தியாவில் கோடைகாலம் என வரையருக்கப்பட்ட மாதங்கள் ஏப்ரல் மற்றும் மே.தற்போது கோடை வெயில் வாட்டிஎடுத்து வருகிறது.பகல் நேரங்களில் கூட மக்கள் வெளியே நடமாட பயப்படுகிறார்கள்.அதிகாலையிலேயே வெப்பம் துவங்கி இருட்டிய பிறகும் புழுக்கம் தருகிற வகையில் சூரியன் சுள்ளென சுட்டெரிக்கின்றான். நமக்கு மட்டும் தான் இந்த கடும் வெயிலா உலகநாடுகள் பலவற்றிலும் உண்டு என்றால் அது நிஜம் தான்.அது பற்றிய சில முக்கிய தகவல்களினை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாயுள்ளேன்.

உலகில் பதிவான அதிக பட்ச அளவு 136 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.பதிவான இடம் வட ஆப்ரிக்காவில் உள்ள லிபியா நாட்டில் உள்ள “அல்-அஸிஸியா” என்ற பாலைவனப்பகுதி.இதுவே இன்று வரை உலகில் பதிவான அதிக பட்ச வெப்ப அளவாகும்.

அமெரிக்கா குளிர் பிரதேசமாக அடையாளப்படுத்தப்படினும் அங்கேயும் பல மாகாணங்களில் வெப்பம் அதிக அளவில் பதிவான வரலாறு உண்டு.1913 ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் “டெத் வேலி” என்ற பாலைவனப்பகுதியில் அடித்த வெப்பத்தின் அளவு அதிகமில்லை 134 டிகிரி பாரன்ஹீட் மட்டுமே.இது உலகின் அதிகபட்ச வெப்பநிலையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்று நான் கூறத்தேவையில்லை.

ஆசியாவில் அதிகபட்ச வெப்பம் பதிவான நாடு இஸ்ரேல்.பதிவான ஆண்டு 1942.பதிவான வெப்ப அளவு 129 டிகிரி பாரன்ஹீட்.

ஆஸ்ரேலியாவில் டிசம்பர் இறுதி முதல் மார்ச் இறுதி வரை கோடைகாலம் வருகிறது.1989ல் குயுன்ஸ்லாண்ட் நகரத்தில் பதிவான 128 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தான் ஆஸ்ரேலியாகண்டம் அனுபவித்த உயர்ந்தபட்ச வெப்பம்.

கனடாவில் வாழ்பவர்கள் 1937ல் அனுபவத்த 113 டிகிரி பாரன்ஹீட்வெப்ப அளவையே அவர்கள் அதிர்ச்சியுடன் நினைவு கூர்வார்கள்.

அயர்லாந்து,ஸ்வீடன்,நார்வே,பின்லாந்து ஆகிய நாடுகளில் இன்று வரை உச்சபட்ச வெப்பம் மூன்று இலக்க அளவைத்தொடவில்லை.அயர்லாந்து சந்தித்த உயர்ந்த பட்ச வெப்பம் உலகநாடுகள் சந்தித்த உயர்ந்த பட்ச வெப்ப பட்டியலில் கடைசியில் உள்ளது.1887ல் அந்நாடு சந்தித்த 91 டிகிரி தான் அந்நாடு சந்தித்த உயர்ந்தபட்ச வெப்பமாகும்.

நாடுகள் அடிப்படையில் அயர்லாந்து கடைசி இடத்தில் இருந்தாலும் நிலம் அடிப்படையில் அண்டார்டிக்கா தான் உலகில் குறைவான வெப்பத்தினை சந்திக்கும் நிலப்பரப்பாகும்.அண்டார்டிக்க சந்தித்த அதிகபட்ச வெப்பம் 15 டிகிரி சந்தித்த ஆண்டு 1974ஆம் ஆண்டு.

ஐரோப்பிய நாடுகள் ஆகஸ்ட்டில் கோடைகாலத்தினை சந்திக்கின்றன.குளிர்காலத்தில் நாம் சந்திக்கின்ற வெயில் அளவைக்கூட கோடைகாலத்தில் அந்நாடுகள் சந்திப்பதில்லை.நமது குளிர்கால வெப்பத்தினை விட அவர்களின் கோடைகால வெப்பம் இருக்கின்றது.ஆனால் ஸ்பெயினில் மட்டும் 122 டிகிரி வரை வெப்பம் சென்றுள்ளது.

2003ல் ஐரோப்பிய நாடுகள் சந்தித்த அதிகபட்ச வெயிலினால் சுமார் 35 ஆயிரம் பேர் தங்கள் உயிர்களினை பறிகொடுத்துள்ளனர்.அதில் அதிகபட்சமாக பிரான்சில் மட்டுமே சுமார் பதினைந்தாயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர்.அப்படியென்ன வெப்ப அளவு என்கிறீர்களா?104 டிகிரி தான்.அதையே அவர்களால் தாங்க முடியவில்லை.

இங்கிலாந்தில் அந்த ஆண்டு தான் முதல் முறையாக மூன்று இலக்க அளவினை வெப்பம் எட்டிப்பார்த்தது.அதனால் 900 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் அதிகபட்ச வெப்பம் எவ்வளவு தெரியுமா? 123 டிகிரி தான்
பாக்கிஸ்தானில் அதிகபட்ச வெப்பம் எவ்வளவு தெரியுமா? 120 டிகிரி தான்

இந்தியாவில் கோடைகால சராசரி வெப்பம் 104 டிகிரி என்று கூறப்படுகிறது.இந்தியாவில் அதிகபட்ச வெப்பம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் அதிக பட்ச வெப்பம் வட இந்தியாவில் தான் பதிவாகிறது.


இன்றைய ஸ்பெஷல்:-
ஓவியம் வரையாத தூரிகை என்ற அனார் எழுதிய கவிதைத்தொகுப்பு தமிழில் சிறு மென்புத்தகமாக இங்கே தரவிரக்கவும்

Monday, May 12, 2008

தேர்தல் நடைமுறையில் மாற்றம் தேவை.....

இந்தியா!மிகப்பெரிய ஜனநாயகநாடு.தேர்தல்கள் பாரபட்சமற்றமுறையில் மிகப்பெரிய அளவில் நடத்தப்படுவதாக உலகநாடுகளில் பல்வேறு பாராட்டுக்கள் பெற்ற நாடு.பழங்காலத்தில் குடவோலை முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறையையும்,பின் கால ஓட்டத்திற்கேற்ப வாக்குச்சீட்டு மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையையும் பின்பற்றி தற்போதைய விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப இ.வி.எம் என்றழைக்கப்படுகின்ற வோட்டிங் மிஷின் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் மக்கள் வாக்களிப்பதினை கட்டாயமாக்கவில்லை.ஆதலால் குறைந்த ஓட்டு பெற்றவர்களே மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

உதாரணமாக ஒரு தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்கள் 1000 என வைத்துக்கொள்வோம்.60 சதவீத வாக்குப்பதிவு நிகழ்ந்தது எனில் வாக்களித்தவர்கள் 600 வாக்காளர்கள்.வாக்களிக்காதவர்கள் 400 வாக்காளர்கள்.இதில் 5 நபர்கள் தேர்தலில் நின்றார்கள் அவர்கள் பெற்ற வாக்குகள் முறையே அ,ஆ,இ,ஈ,உ ஆகியோர் முறையே 35,22,31,7,5 சதவீத வாக்குகள் பெற்றார்கள் எனவைத்துக்கொண்டால் அ,ஆ,இ,ஈ,உ ஆகியோர் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை முறையே 210,132,186,42,30 என்றிருக்கும்.தற்போதைய தேர்தல் நடைமுறையின் படி 210 வாக்குகள் பெற்ற ”அ” வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதில் வேடிக்கை என்ன வென்றால் பதிவான வாக்குகளினை மட்டும் எடுத்துக்கண்டால் ”அ” பெற்ற மொத்த வாக்கு 210 ஆனால் அவர்பெறாத வாக்குகள் 390 .இது ஒரு முரண்பாடு

இரண்டாவதாக வாக்களிக்க தகுதி பெற்றோர் 1000 ஆனால் ”அ”அவர்கள் பெற்ற வாக்குகள் 210 ஆக 790 வாக்காளர்களுக்கு ”அ” அவர்களை தேர்ந்தெடுக்க மனமில்லை ஆனால் என்செய்ய அவர் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.இது விந்தையிலும் விந்தையன்றோ!

மாற்றங்கள் என்ன தேவை?

1.வாக்களிப்பதினை கட்டாயமாக்கவேண்டும்.
வாக்களித்தவர்களுக்கு சான்று வழங்கி அதனைக்காட்டினால் மட்டுமே அரசின் பிற சலுகைகளினை அனுபவிக்க முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.எப்படி பிறப்புச்சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ அதே போன்று வாக்களித்தச்சான்று கட்டாயமாக்கப்படவேண்டும்

2.முதல் முறை தேர்தல் முடிந்தவுடன் முதல் இரண்டு இடங்களினைப்பெற்றவர்களுக்கு மட்டுமோ அல்லது குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் பெற்றவர்களுக்கு மட்டுமோ மறுதேர்தல் நடத்தி 50 விழுக்கட்டிற்கு மேல் பெறுபவர்களே வெற்றி பெற்றதாக கருதப்படவேண்டும்.

3.வாக்களிக்க விரும்பவில்லை என்ற விருப்பத்தேர்வை அளித்து அது குறிப்பிட்ட சதவீதத்தினை தாண்டும் பட்சத்தில் வேட்பாளர்களினை மாற்றி மறுதேர்தல் நடத்தப்படவேண்டும்.

இது என்னுடைய கருத்து.அதை ஆமோதிப்பவர்கள் ஆமோத்திக்கலாம் மறுப்பவர்கள் பின்னூட்டமிடலாம்
கருத்துகள் வரவேற்கப்படுகின்றது.



இன்றைய ஸ்பெஷல்:
இரமணிச்சந்திரன் அவர்களின் கண்ணம்மா என்ற நாவல் மின்புத்தகமாக இங்கே உங்களுக்காக,தரவிறக்குங்கள்





Sunday, May 11, 2008

எனக்குப்பிடித்த பாடல்களின் தொகுப்பு 3......

இனிய பாடல்களின் மூன்றாவது தொகுப்பு உங்களுக்காக

புலமைப்பித்தனின் வரிகளில் ஜேசுதாஸின் அற்புதகுரலில் எம்.ஜி.ஆரின் நடிப்பில் உருவான உள்ளத்தினைக்கொள்ளைகொள்ளும் பாடல்.


பாடல்: இந்தப் பச்சைக் கிளிக்கொரு
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: புலமைப்பித்தன்

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன் - அதில்
பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன் - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட

(இந்தப்)

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - பின்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)

தூக்கமருந்தினைப் போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள் - நோய்
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள் (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)

ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் - தினம்
நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம் (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)

பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை - நல்ல
பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)


மேற்காணும் பாடலை தரவிரக்க இங்கே முயலலாம்


____________________________________________________________________________________

உனக்கு நான் சளைத்தவரா என எஸ்.பி.பியும் எஸ்.ஜானகியும் போட்டிபோட்டு பாடிய அற்புதப்பாடல் இதுவன்றோ


பாடல்: ஓ வசந்த ராஜா
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
வரிகள்: வைரமுத்து


ஓ வசந்த ராஜ தேன் சுமந்த ரோஜா
என் தேகம் உன் தேசம் என்னாளும் சந்தோஷம் - என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

(ஓ வசந்த)

வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ கண்ணே (2)
சூடிய பூச்சரம் வானவில்தானோ?

(ஓ வசந்த)

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு (2)
மன்மதக் கோயிலில் பாலபிஷேகம்

(ஓ வசந்த)



மேற்காணும் பாடலை தரவிரக்க இங்கே முயலலாம்

__________________________________________________________________________________

புண்பட்ட இதயத்திற்கு இதமான இப்பாடலினை வாலி இயற்றியிருந்தாலும் அற்புத குரலால் எஸ்.பி.பியும் நடிப்பில் அரவிந்த்சாமியும் அதற்கு மெருகூட்டியுள்ளனர்.


பாடல்: நலம் வாழ என்னாளும்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி


நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்

(நலம் வாழ)

மனிதர்கள் சிலனேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே

(நலம் வாழ)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்...

(நலம் வாழ)


மேற்காணும் பாடலை தரவிரக்க இங்கே முயலலாம்

______________________________________________________________________________________

இன்றைய ஸ்பெஷல்:-

மர்மக்கதை மன்னன் ஷெர்லக்ஹோம்ஸ் அவர்களின் கதை இங்கே மின்புத்தகமாக உங்களுக்காக.,தரவிரக்கிக்கொள்ளவும்

எனக்குப்பிடித்த பாடல் தொகுப்பு 2.......

பாடல்களின் அணிவரிசையின் இரண்டாம் பாகம் இதோ உங்களுக்காக...

வைரமுத்துவின் வைரவரிகளினால் இப்பாடல்கள் புகழ்பெற்றனவா? அல்லது எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியதால் இப்பாடல்கள் புகழ்பெற்றனவா?யாமறியேன் பராபரமே...


பாடல்: பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

(பனிவிழும்)

சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைகளில் நெளிகயில் இடைவெளி குறைகயில்
எரியும் விளக்குச் சிரித்து கண்கள் மூடும்

(பனிவிழும்)

காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் ஹ ஹா பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
???? நினைவிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி குளிர்கயில்
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

(பனிவிழும்)

மேற்படி பாடலினை தரவிரக்க இங்கே முயலுங்கள்


___________________________________________________________________________________


பாடல்: நீதானே எந்தன் பொன்வசந்தம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் இன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் அன்னேரம்

(நீதானே)

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் வேளையில் ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையினில் தென்றல் கவரிகள் வீசும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் என்னாளும்

(நீதானே)

ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் கோடி நினைவு
உன் ஆசை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் பேசும் மொழிகளில் பிறையும் பௌளர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் என்னாளும்

(நீதானே)


மேற்படி பாடலினை தரவிரக்க இங்கே முயலுங்கள்


______________________________________________________________________________________


பாடல்: ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
வரிகள்: வைரமுத்து

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்

(ரோஜாவைத்)

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
மௌளனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ஆ ஆ

(ரோஜாவைத்)

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்
பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள் மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ

(ரோஜாவைத்)


மேற்படி பாடலினை தரவிரக்க இங்கே முயலுங்கள்

_____________________________________________________________________________________

இன்றைய ஸ்பெஷல்:-

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று காவியம் மென்புத்தகமாக இங்கே உங்களுக்காக.

எனக்குப்பிடித்த பாடல் தொகுப்பு 1....

தமிழ் மொழிக்கு உள்ள் சிறப்பு வேறெந்த மொழிக்கும் கிடையாது.ஒருவரை புகழ்வது போல இகழ்வதும்,வேறொன்றுடன் ஒப்பிட்டு கூறுவதும் என சொல்லிக்கொண்டே போகலாம்.அவ்வினிமையான தமிழினை சினிமா பாடல் ஆசிரியர்கள் திறம்பட கையாளுகின்றனர் என்றால் அது மிகையில்லை.எனக்குப்பிடித்த பாடல்களினையும் அதன் வரிகளினையும் உங்கள் முன் வைக்கின்றேன்.உங்களுக்கும் பிடிக்கும் எனில் தரவிரக்கிக்கொள்ளுங்கள்.


சிவக்குமார் ,சரிதா ஜோடி சிவக்குமார் பாடுவதாக அமைந்தது.மனைவியின் மீது கொண்டபாசத்தினை அன்பை வெளிக்காட்டுவதாக அமைந்தது இந்தப்பாடல்,இளையராஜாவின் இசை இப்பாடலுக்கு மேலும் பெருமை சேர்த்தது.



பாடல்: கனாக் காணும் கண்கள் மெல்ல
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சரிதா
படம்:- அக்னி சாட்சி


கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம் உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே

(கனாக்)

குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ
குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ
நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி
விளக்கு ஏற்றி வைத்தால் கூட நிழல் போலத் தோன்றும் நிஜமே
நிழல் போலத் தோன்றும் நிஜமே

"நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால்தான் உன் நிழல் விழுந்த இடத்தின் மண்ணைக்கூட
நெற்றியில் நீருபோல் திருனீருபோல் இட்டுக்கொள்கிறேன்"

(கனாக்)

புதிய கவிதை புனையும் குயிலே நெஞ்சில் உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன
புதிய கவிதை புனையும் குயிலே நெஞ்சில் உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே
நிகழ்காலம் கூறூம் கண்ணே

(கனாக்)

மேற்படி பாடலை தரவிறக்க இங்கே முயலலாம்.

____________________________________________________________________________________
கோபுர வாசலிலே என்ற படத்தில் அமைந்த இப்பாடல் காதலன்,காதலிக்கிடையேயான அனபை வெளிப்படுத்துவதாக அமைந்தது என்றால் அது மிகையில்லை


பாடல்: காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா

எஸ்! ஐ லவ் யூ ஐ லவ் யூ இடியட்.....................

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்
இதம் தரும்

(காதல்)

கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புனலோ நதியோ கலையழகோ
மேகமொன்று நேரிலிங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி
இது தொடரும் மலரும் வளரும்
இனிக் கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்

(காதல்)

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒருனாள் பலனாள் தொடர்ந்தாள் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம்

(காதல்)


மேற்படி பாடலை தரவிறக்க இங்கே முயலலாம்.

______________________________________________________________________________________

கவிஞர் கண்ணதாசனின் வைரவரிகளினை பாருங்கள்,அதிலுள்ள இனிமையை உணர்வதினை உங்களிடமே விட்டு விடுகின்றேன்.


பாடல்: இளமையெனும் பூங்காற்று
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்


இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம் (2)

(இளமையெனும்)

தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா

(இளமையெனும்)

அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ

(இளமையெனும்)

மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ

(இளமையெனும்)

மேற்படி பாடலை தரவிரக்க இங்கே முயலுங்கள்.


இன்றைய ஸ்பெஷல்:ஆங்கிலம்-தமிழ் கணிப்பொறி அறிவியல் டிக்‌ஷ்னரி உங்களுக்காக சிறு மென்புத்தகமாக இங்கே

டிவிடியிலிருந்து விரும்பிய பகுதியை வெட்டியெடுக்க........



வீடியோ சிடி தற்போது வழக்கொழிந்து போய் தற்போது டிவிடிகளின் ஆதிக்கமாக உள்ளது.சிடிக்களில் உள்ள வீடியோக்களில் இருந்து நமக்கு வேண்டிய பகுதிகளினை குறிப்பாக பாடல்களை வெட்டியெடுக்க அதிகளவில் பயன்படுத்தப்படும் மென்பொருள் சிடிகட்டர்(CDCutter)அதேபோல டிவிடிக்களிலிருந்து விரும்பிய பகுதிகளினை வெட்டியெடுக்க பயன்படுத்தப்படும் மென்பொருள் DVDcutter இருப்பினும் DVDknife என்ற மென்பொருள் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.மேற்படி மென்பொருளினை தரவிரக்கி டிவிடியில் உள்ள படங்களில் இருந்து நமக்குத்தேவையான பகுதிகளினை வெட்டி எடுத்து பயன்படுத்தலாம்.முயன்று பார்த்து உங்கள் அனுபவங்களினை உள்ளீடுங்கள்.
மென்பொருளினை இங்கும் தரவிறக்கலாம்.

இன்றைய ஸ்பெஷல்:

அமரர் சுஜாதா அவர்கள் எழுதிய கடவுள் உள்ளாரா என்ற கதை இ.புத்தகமாக உங்களுக்காக இங்கே

Saturday, May 10, 2008

வீடியோக்களை ஸ்கிரீன் சேவராக்க..........

i செல்பேசி மூலமாகவோ அல்லது கேம்கார்டர் மூலமாகவோ எடுக்கப்பட்ட வீடியோவாக இருந்தாலும் சரி இல்லை உங்களது கணிணியில் ஹார்டுடிஸ்க்கில் சேகரித்து வைக்கப்பட்ட வீடியோக்களாக இருந்தாலும் சரி அதனை உங்கள் கணிணியில் ஸ்கிரின் சேவராக மாற்றமுடியும்.அதற்கு விடியோ ஸ்கிரீன் சேவர் மென்பொருள் உதவுகிறது.

ஏற்கனவே டிஜிட்டல் கேமிரா அல்லது செல்பேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களினை அழகூட்டி,ஸ்பெஷல் எபெக்ட்ஸ் கொடுத்து விரும்பிய முறையில் மாற்றி அமைத்து பாடல்களினைச்சேர்த்து ஸ்கிரின் சேவராக மாற்றும் வழியை தெரிவித்துள்ளேன்.(முந்தைய பதிவுக்குச்செல்ல)அதன்வரிசையில் இது வீடியோக்களை ஸ்கிரீன் சேவராக மாற்ற உதவுகிறது

மைக்ரோசாப்ட் மென்பொருளில் Microsoft Video Screensaver (International Edition) என்ற வீடியோ ஸ்கிரீன் மென்பொருள் உள்ளது.ஆனால் ஒரிஜினல் மைக்ரோசாப்ட் மென்பொருள்களில் மட்டுமே தரவிறக்க முடியும்.

வேலிடேஷன் இல்லாமல் இயங்கக்கூடிய மென்பொருள் விடியோ ஸ்கிரீன் சேவர் மென்பொருள் அளவும் குறைவு (641 கே.பி மட்டுமே)
முயன்று பாருங்கள்.பின்னூட்டமிடுங்கள்

இன்றைய ஸ்பெஷல்:-

கோடை விடுமுறை ஆதலால் பயனுள்ள சமையல் குறிப்புகள் சிறு இ.புத்தகமாக இங்கே உங்களுக்காக.

30 வகை பழவகை சமையல் குறிப்பு இங்கே தரவிரக்க

30 வகை ஐஸ்கிரீம் தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை ஐஸ் டிஷ் தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை இட்லி தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை கஞ்சி தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை கிழங்கு ரெசிப்பிஸ் இங்கே தரவிரக்க

30 வகை கூட்டு தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை பாயாசம் தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை பிரியாணி தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை பொடி தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை போண்டா மற்றும் வடை தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை பூரி தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை பொரியல் தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை ரசம் தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை சாதம் தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை சூப் தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை இனிப்பு உருண்டை தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை சர்க்கரை நோயாளிகளுக்கான ஸ்னாக்ஸ் தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை டிபன் தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை தக்காளி சமையல் தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை வருவல் தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

30 வகை வெரைட்டி ரைஸ் தயாரிப்பு முறைகள் இங்கே தரவிரக்க

விவேகானந்தர்-வணக்கத்திற்குரியவர்......



எளிமையானவர்,இந்துமதத்துறவி,இந்துமதப்புகழினை உலகளாவிய அளவில் பரப்பியவர்,என சுவாமி விவேகானந்தர் பற்றி கூறிக்கொண்டே போகலாம்.அந்த அளவிற்கு இந்து மதக்கோட்பாடுகளில் நம்பிக்கைக்கொண்டு உலகளாவிய அளவில் இந்து மதப்பெருமைகளை நிலைநிறுத்தியவர்.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு அவரின் புகழை இந்தியாவின் பெருமையை உயரச்செய்தது என்றால் அது மிகை இல்லை.
மேற்படி சொற்பொழிவு பற்றிய சிறு தகவல் தொகுப்பினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.


Chicago Address - 1


Response to Welcome At The World's Parliament of Religions,
Chicago, 11th September 1893

Sisters and Brothers of America, It fills my heart with joy
unspeakable to rise in response to the warm and cordial welcome
which you have given us. l thank you in the name of the most
ancient order of monks in the world; I thank you in the name of the
mother of religions; and I thank you in the name of the millions
and millions of Hindu people of all classes and sects. My thanks,
also, to some of the speakers on this platform who, referring to
the delegates from the Orient, have told you that these men from
far-off nations may well claim the honor of bearing to different
lands the idea of toleration. I am proud to belong to a religion
which has taught the world both tolerance and universal acceptance.
We believe not only in universal toleration, but we accept all
religions as true. I am proud to belong to a nation which has
sheltered the persecuted and the refugees of all religions and all
nations of the earth. I am proud to tell you that we have gathered
in our bosom the purest remnant of the Israelites, who came to the
southern India and took refuge with us in the very year in which
their holy temple was shattered to pieces by Roman tyranny. I am
proud to belong to the religion which has sheltered and is still
fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote
to you, brethren, a few lines from a hymn which I remember to have
repeated from my earliest boyhood, which is every day repeated by
millions of human beings:

"As the different streams having there sources in different
places all mingle their water in the sea, so, O Lord, the
different paths which men take through different tendencies,
various though they appear, crooked or straight, all lead to
Thee."

The present convention, which is one of the most august assemblies
ever held, is in itself a vindication, a declaration to the world,
of the wonderful doctrine preached in the Gita:

"Whosoever comes to Me, through whatsoever form, I reach him;
all men are struggling through paths which in the end lead to
Me."

Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism,
have long possessed this beautiful earth. They have filled the
earth with violence, drenched it often and often with human blood,
destroyed civilization, and sent whole nations to despair. Had it
not been for these horrible demons, human society would be far more
advanced than it is now. But their time is come; and I fervently
hope that the bell that tolled this morning in honor of this
convention may be the death-knell of all fanaticism, of all
persecutions with the sword or with the pen, and of all
uncharitable feelings between persons wending their way to the same
goal.

இவ்விடத்தில் மேலும் ஒன்றினைக்கூற ஆசைப்படுகின்றேன்.சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு ஆடியோ வடிவில் எனக்கு
சில குறிப்புகளுடன் வரப்பெற்றது.அதன் வடிவத்தினை அப்படியே உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.அதன் நம்பகத்தன்மை பற்றிய முடிவை உங்களிடமே விட்டுவிடுகின்றேன்

vivehananda

This is an audio of Swamy Vivekanandan´ s historic speech at World Religion´s Parliament at Chicago in 1893

The fellow who first uploaded this in internet, claims that this is original copy of the Swami Vivekanandan' s Chicago speech he made at the World Religion´s Parliament, and the uploader got the audion from the "Vivekanand Society of Chicago”. He claim that the audio track of the speech was recently discovered at the Chicago Museum of Art's audio archive where Swami Vivekananda had given this historic speech. Well, it may be possible to have audio records of such important meetings since commercial audio recording was started even before Chicago World Religion Meeting (1893). But I am not convinced however.

[This is simply because, there are so many controversies on the authenticity of this audio. Some sceptics say this is only similar to the voice of one Prof. N. Viswanathan, an Oxford trained Professor who later also served as the English News Reader in Calcutta Doordarsan during 80´s. Furthermore, in the World Parliament, Swamiji was introduced by a gentleman comparer, but here he was invited to the podium by a lady whose voice sounds far too contemporary American! Moreover there is no documental proof that the Conference was sound recorded, since gramophone was just discovered only 4 or 5 years before.]

It doesn't matter whether it is authentic or not, all it matters is that it provides an excellent opportunity for us to listen to message of Swami Vivekananda. . The full text of the speech is available on

Incidentally his "Brothers and Sisters" speech was delivered on one September 11th !

ஒலிவடிவம் இதோ உங்களுக்காக இங்கே தரவிறக்கவும் பகுதி 1 ,பகுதி 2

இன்றைய ஸ்பெஷல்:-

சி மொழி பற்றிய புத்தகம் தமிழில் இ புத்தகமாக இங்கே தரவிரக்கவும்

அரிய புகைப்படங்கள் பாகம்3

நவநாகரீக இந்தியாவை நாம் கண்கூடாகப்பார்த்துவருகிறோம்.ஆனால் பழங்கால இந்தியா எப்படி இருந்திருக்கும்,கற்பனைச்சிறகை விரிக்கிறோம்.அவரவர் எண்ண ஓட்டங்களுக்கேற்றபடியே நாம் கற்பனைசெய்வோம்.இங்கே பழங்கால இந்திய புகைப்படங்களினை உங்களுக்காக காட்சிபடுத்துகின்றேன்.ஒப்பிட்டு பாருங்கள்,நவநாகரீக இந்தியாவிற்கும் பழங்கால இந்தியாவிற்கும் உள்ள வேறுபாடுகளினை.




Mylopore Chennai 1939




ooty 1905



Power plant 1917



Train at1895



VT Station Mumbai 1894



karachi 1917



Karachi theatre 1917



Lahore 1864



multi complex Departmental Store 1883



Mumbai 1894



Chennai Library 1913



Chennai Marina Beach 1913



chennai Market(Kothaval Chawadi)1939



Ford 1917



Hoogly (calcutta)1915


A school Boy





ambulance at chennai1940




Andaman 1917



bank of madras 1935



car showroom chennai 1913



இன்றைய ஸ்பெஷல்:

பாக்கியநாதன் எழுதிய எளிய தமிழில் ஜாவா இ.புத்தகம் இங்கே உங்களுக்காக
தரவிறக்க இங்கே சொடுக்குங்கள்