Thursday, May 15, 2008

நியாயம் தானா?......


கல்வி.கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது முன்னோர் வாக்கு.கல்லாமல் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் எண்ணம் எல்லாம் தனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து நல்ல நிலையை அடைவதினை பார்க்க வேண்டும் என்பதே.இதனை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

கல்வி இன்று வியாபாரம் ஆகிவிட்டது.ஆம் அனைத்து அரசியல்வாதிகளும் தாங்கள் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்திருப்பது கல்விக்கூடங்களில் தான்.பொது நலத்தோடு ஆரம்பிக்கின்றோம் என்று ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் குழந்தைகளைச் சேர்ப்பதற்குள் பேற்றோருக்கு போதும் போதும் என்றாகிவிடுகின்றது.சாதாரண ஏழை பெற்றோரும் தங்கள் குழந்தைகளை ஆங்கிலம் கற்பிவிக்கும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சேர்க்கும் எண்ணம் தான் தற்போது மேலோங்கி வருகிறது.

ஆனால் தமிழகத்தினை ஆளும் கட்சிகள் தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது.எப்படி என்றால் மத்திய அரசால் "ஜவஹர் நவோதயா வித்யாலயா”என்ற உண்டு உறைவிடப்பள்ளி ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசால் நிறுவப்பட்டு ஆறம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மாணவ,மாணவிகள் சேர்க்கப்பட்டு தலை சிறந்த ஆசிரியர்களால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர்.அவர்களுக்கான அனைத்து செலவுகளும் மத்திய அரசால் மனித மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.மாணவர்கள் அணியும் செருப்பு முதல் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுடன் அவர்களின் திறமைக்கேற்ப மற்ற துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகின்றது.இப்படிப்பட்ட பள்ளிகள் நிறுவ அனுமதி வழங்கப்படவில்லை.காரணமாகக் கூறப்படுவது மேற்படி பள்ளிகளில் இந்தி மொழி திணிப்பு நடந்து விடுமாம்.காரணம் வேடிக்கையாக இல்லை.மக்களை ஏமாற்றும் முயற்சி அல்லவா? எந்த குடிமகன் மேற்படி பள்ளி வேண்டாம் என்று ஆளும் அரசியல் தலைவர்களிடம் போய் முறையிட்டார் என்று தெரியவில்லை.மேற்படி பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டால் அரசியல்வாதிகளினால் ஆரம்பிக்கப்பட்ட் பள்ளிகள் ஆட்டம் கண்டு விடும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஒவ்வோர் ஆண்டும் எத்தனை மாணவர்கள் மேற்படி நல்ல வாய்ப்பினை இழக்கின்றார்கள்.அத்தோடு மட்டுமில்லாமல் ஆசிரியர் ஆகவேண்டும் என்ற கனவுடன் இருக்கும் எத்தனை இளைஞர்,இளைஞிகள் வாய்ப்புகளினை இழக்கின்றார்கள்.இதில் வேடிக்கை அம்சம் என்னவென்றால் பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்த உண்டு உறைவிடப்பள்ளிகளில் தமிழ் மாநிலத்தினைச்சார்ந்த பலர் பணியில் உள்ளனர்.

தமிழ்மொழி பற்றி பெருமை பேசும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் நல்ல ஆங்கிலம் மற்றும் இந்தி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் மட்டும் தான் சேர்க்கப்படுகின்றனர்.(எம் பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தி மொழியில் தானே பேரம் பேசினால் எடுபடும்)மக்களினைப்பற்றி அவர்களுக்கு கவலை ஏது?


இந்தி மொழி திணிப்பு என்ற காரணத்தினைச் சொல்பவர்கள் மத்திய அரசினை நிர்பந்தித்து தமிழினை முதன்மைப்பாடமாகக்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு ஜவஹர் நவதோதயா வித்யாலயா பள்ளிகளை அமைக்க அனுமத்திக்கலாமே.அனைத்தும் முடிந்தது இது மட்டும் முடியவில்லையா?காரணம் எளிதாக விளங்குகின்றதா?

ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசு தமிழக அரசிடம் அனுமதி கோருகிறது.ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது.இது தமிழக மக்களுக்குச்செய்யும் துரோகம் அன்றோ?

தமிழக அரசு தமிழக மக்களினை வஞ்சிப்பது புலனாகிறதா?

எனது இவ்வாதங்கம் நியாயமானதா? உங்கள் கருத்துகளினை உள்ளீடுங்கள்...

மேலும் ஜவஹர் நவதோதயா வித்யாலயா பள்ளிகளைப்பற்றி அறிய இங்கு சொடுக்குங்கள்

இன்றைய ஸ்பெஷல்:-

மரியாதை ராமன் கதைகள் இங்கே உங்களுக்காக தமிழில் சிறு மின் புத்தகமாக இங்கே தரவிரக்கவும்.