Sunday, May 11, 2008

எனக்குப்பிடித்த பாடல் தொகுப்பு 1....

தமிழ் மொழிக்கு உள்ள் சிறப்பு வேறெந்த மொழிக்கும் கிடையாது.ஒருவரை புகழ்வது போல இகழ்வதும்,வேறொன்றுடன் ஒப்பிட்டு கூறுவதும் என சொல்லிக்கொண்டே போகலாம்.அவ்வினிமையான தமிழினை சினிமா பாடல் ஆசிரியர்கள் திறம்பட கையாளுகின்றனர் என்றால் அது மிகையில்லை.எனக்குப்பிடித்த பாடல்களினையும் அதன் வரிகளினையும் உங்கள் முன் வைக்கின்றேன்.உங்களுக்கும் பிடிக்கும் எனில் தரவிரக்கிக்கொள்ளுங்கள்.


சிவக்குமார் ,சரிதா ஜோடி சிவக்குமார் பாடுவதாக அமைந்தது.மனைவியின் மீது கொண்டபாசத்தினை அன்பை வெளிக்காட்டுவதாக அமைந்தது இந்தப்பாடல்,இளையராஜாவின் இசை இப்பாடலுக்கு மேலும் பெருமை சேர்த்தது.



பாடல்: கனாக் காணும் கண்கள் மெல்ல
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சரிதா
படம்:- அக்னி சாட்சி


கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம் உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே

(கனாக்)

குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ
குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ
நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி
விளக்கு ஏற்றி வைத்தால் கூட நிழல் போலத் தோன்றும் நிஜமே
நிழல் போலத் தோன்றும் நிஜமே

"நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால்தான் உன் நிழல் விழுந்த இடத்தின் மண்ணைக்கூட
நெற்றியில் நீருபோல் திருனீருபோல் இட்டுக்கொள்கிறேன்"

(கனாக்)

புதிய கவிதை புனையும் குயிலே நெஞ்சில் உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன
புதிய கவிதை புனையும் குயிலே நெஞ்சில் உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே
நிகழ்காலம் கூறூம் கண்ணே

(கனாக்)

மேற்படி பாடலை தரவிறக்க இங்கே முயலலாம்.

____________________________________________________________________________________
கோபுர வாசலிலே என்ற படத்தில் அமைந்த இப்பாடல் காதலன்,காதலிக்கிடையேயான அனபை வெளிப்படுத்துவதாக அமைந்தது என்றால் அது மிகையில்லை


பாடல்: காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா

எஸ்! ஐ லவ் யூ ஐ லவ் யூ இடியட்.....................

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்
இதம் தரும்

(காதல்)

கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புனலோ நதியோ கலையழகோ
மேகமொன்று நேரிலிங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி
இது தொடரும் மலரும் வளரும்
இனிக் கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்

(காதல்)

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒருனாள் பலனாள் தொடர்ந்தாள் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம்

(காதல்)


மேற்படி பாடலை தரவிறக்க இங்கே முயலலாம்.

______________________________________________________________________________________

கவிஞர் கண்ணதாசனின் வைரவரிகளினை பாருங்கள்,அதிலுள்ள இனிமையை உணர்வதினை உங்களிடமே விட்டு விடுகின்றேன்.


பாடல்: இளமையெனும் பூங்காற்று
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்


இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம் (2)

(இளமையெனும்)

தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா

(இளமையெனும்)

அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ

(இளமையெனும்)

மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ

(இளமையெனும்)

மேற்படி பாடலை தரவிரக்க இங்கே முயலுங்கள்.


இன்றைய ஸ்பெஷல்:ஆங்கிலம்-தமிழ் கணிப்பொறி அறிவியல் டிக்‌ஷ்னரி உங்களுக்காக சிறு மென்புத்தகமாக இங்கே