Sunday, November 9, 2008

வீட்டுத்தேவைக்கான மின் உற்பத்தி.......



மரபு சாரா எரிசக்தியில் ஒன்றே காற்று மூலம் மின் உற்பத்தி செய்வது.தமிழ்நாட்டில் கயத்தாறு மற்றும் ஆழ்வார்திரு நகரி ஆகிய இடங்களில் காற்றாலைகள் நிறுவப்பட்டி மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.பின் காற்று அதிகம் வீசக்கூடிய இடங்களினை தெரிவு செய்து தற்போது பல இடங்களில் காற்று மூலம் மின்சாரம் தயார் செய்யக்கூடிய நிலை இருந்து வருகிறது.
மிந்தட்டுப்பாட்டுக்கு காரணம் காற்று வீசுவது குறைந்து விட்டது என்றொரு காரணமும் இப்போது சொல்லப்படுகிறது.
தற்போது நிலவி வரும் மின் தட்டுப்பாட்டிலிருந்து நம்மைக்காத்துக்கொள்ள அருமையான வழி.நம் வீட்டிற்குத்தேவையான மின்சாரத்தினை நாமே உற்பத்தி செய்து கொள்வதுதான்.அதற்கு கிரீன் பவர் டெக் என்ற நிறுவனம் வீட்டிற்குத்தேவையான காற்றாலைகளினை நிறுவி வருகின்றது.இது கோயம்புத்தூர் மாநகரைச்சார்ந்த நிறுவனம் ஆகும்.300 வாட் முதல் 3 கிலோ வாட் வரை உற்பத்தி செய்யக்கூடிய அளவில் காற்றாலைகளினை நிறுவி வருகிறார்கள்.இதனைப்பற்றி மேலும் அறிய தொடர்பு கொள்ளுங்கள்
S. Sashikumar (9894657138).
தமிழ்நாட்டில் மரபு சாரா எரிசக்தி பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்குங்கள்

இன்றைய ஸ்பெஷல்:-

மனசே ரிலாக்ஸ் பிளீஸ்....தமிழ் மின் நூல் இங்கே உங்களுக்காக
தரவிரக்க இங்கே முயலுங்கள்

Wednesday, October 8, 2008

அனுப்பிய மெயில் படிக்கப்பட்டதா என அறிய.....


மாங்கு மாங்கென்று கடிதம் எழுதி அதை போஸ்ட் செய்து அது இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் கழித்து போய்சேர்ந்து பிறகு படிப்பார்கள்.அது சிறிது முன்னேறி ரெஜிஸ்டர் போஸ்ட்,ஸ்பீட் போஸ்ட் என்றாகி தற்போது கூரியர் சர்வீஸ் வந்தது தொலை பேசி யுகமான இக்காலத்தில் கடிதம் எழுதும் பழக்கத்திற்கே வேட்டு வைத்துவிட்டது.

இருப்பினும் இணையகாலத்தில் இ.மெயிலில் கடிதம் அனுப்புவது வாழ்த்து அனுப்புவது வேலைக்கு விண்ணப்பிப்பது மற்றும் அலுவல் சார்ந்த பணிகளுக்கு கடிதம் அனுப்புவது ஆகியவை அதிகம் நடைபெற்று வருகிறது.
ஆனால் மெயில் போய் சேர்ந்ததா?நாம் அனுப்பியவர்கள் படித்தார்களா?என்றறிவது அவர்கள் பதில் மெயில் அனுப்பித்தால் தான் தெரியும்.
அதற்கு உதவுவது தான் இந்த ஸ்பைபிக் தளம்(SPYPIG).இது ஒரு இலவச சேவைதான்.

முதலில் எப்போதும் போல் மெயிலை தட்டச்சு செய்து தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.பின் மேற்கூறிய இணைய தளத்திற்குச்செல்லவேண்டும்.அங்கு உங்கள் முகவரி ,யாருக்கு மெயில் அனுப்ப வேண்டுமோ அவரதி இமெயில் முகவரி ஆகியவற்றினை கொடுக்க வேண்டும்.
பின் அவர்கள் கொடுத்துள்ள படங்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.அதில் உள்ள வெற்றுப்படத்தினை தேர்வு செய்தால் நாம் ட்ராக் செய்வது அவர்களுக்கு தெரியாது.மற்றப்படங்களினை தேர்வு செய்தால் நாம் ட்ராக் செய்வது தெரியும்.சூழ்நிலைக்குத்தக்க படங்களினைத்தேர்வு செய்வது அவசியம்.பின் "Click to activate My Spypig"என்பதினைக் கிளிக் செய்ய வேண்டும்.இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்தெடுத்த படம் காட்டப்படும்.அதனை காப்பி செய்து கொள்ளவும்.ஏற்கனவே தட்டச்சு செய்து வைத்துள்ள மெயிலினை திறந்து காப்பி செய்து வைத்துள்ள படத்தினை ஒட்டி உடனே மெயிலினை அனுப்பிவிட வேண்டும்.அவ்வளவுதான்.

யாருக்கு நீங்கள் மெயிலினை அனுப்பினீர்களோ அவர்கள் அந்த மெயிலினை திறந்து படித்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார்,எப்பொது படித்தார் என்பது போன்ற தகவல்கள் உங்கள் மெயிலிற்கு வந்து சேர்ந்து விடும்.
தள முகவரி:-SPYPIG

இன்றைய ஸ்பெஷல்:-

வாஸ்து சாஸ்திரம் பற்றிய மின் நூல் இங்கே தமிழில் உங்களுக்காக
இங்கே தரவிரக்கவும்.


Thursday, October 2, 2008

எந்திரன்......

எந்திரன்....ஷங்கர்,அமரர் சுஜாதா மற்றும் சூப்பர் ஸ்டார் காம்பினேஷனில் உருவாகும் தமிழ் படம்.இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.படப்பிடிப்பில் படம்பிடிக்கப்பட்ட படங்கள் இங்கே உங்களுக்காக..


இன்றைய ஸ்பெஷல்:-

இரமணிச்சந்திரன் எழுதிய”நின்னையே ரதி என்று...”நாவல் மென் புத்தகமாக இங்கே உங்களுக்காக.இங்கே தரவிரக்கவும்.