Sunday, September 28, 2008
கணிப்பொறியின் வேகத்தினை அதிகரிக்க.....
டிஃபிராக்மென் ட் பயன்பாடு அனைவரும் அறிந்ததே.விண்டோஸ் இயங்கு தளத்தில் உள்ள டிஃபிராக்மென் ட் பயன்பாட்டினை எல்லோரும் பயன்படுத்தி இருப்போம்.ஆனால் டிஃபிராக்மென் ட்ஆவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.ஹார்டிஸ்கில் கன்னாபின்னாவென்று இடம் பெற்றுள்ள தகவல்களினை இடம் மாற்றி வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்துவது தான் டிஃபிராக்மென் ட் செயல்பாடு.வேகம் குறைவாக உள்ள கணிணியில் டிஃபிராக்மென் ட் செய்தபின் வேகம் அதிகரித்திருக்கும்.இந்த விண்டோஸ் பயன்பாட்டிற்கு ஓர் மாற்று பயன்பாடு தான் டிஃப்ராக்லெர்.இலவச இம்மென்பொருளினை இணையிறக்கி டிஃபிராக்மென் ட் செய்து கணிணியின் வேகத்தினை அதிகரிக்கலாம்.
இந்த பயன்பாட்டினை இலவசமாக இணையிறக்கிக்கொள்ள இங்கே சுட்டுங்கள்
இன்றைய ஸ்பெஷல்:-
சி மொழி ஓர் அறிமுகம் தமிழில் சிறு மென்புத்தகமாக.இங்கே தரவிரக்கவும்