
இன்று எண்ணற்ற விடியோக்கள் இணையத்தில் உலாவவிடப்பட்டுள்ளன.விடியோக்களை தரவேற்றவென்றே இணையத்தில் யூ.டியூப் ,கூகுள் விடியோ என்று ஏகப்பட்ட தளங்கள் இணையத்தில் உலா வருகின்றன.உங்களுக்கு பிடித்தமான,ஆனால் பதிவிறக்கம் செய்ய வழிவகைசெய்யப்படாத பிளாஷ்,எம்.பி 4,என பார்க்க மட்டுமே அனுமதிக்கின்ற அனைத்து பைல்களினையும் தற்போது பலபேர் பலவிதமாக பதிவிறக்கம் செய்கின்றனர்.யூடியூப் மட்டுமன்றி அனைத்து தளங்களிலும் உள்ள மல்டி மீடியா பைல்களினையும் பதிவிறக்கம் செய்யலாம்.வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய உதவும் ஓர் முக்கிய தளம் www.keepvid.com .நமக்குப்பிடித்த விடியோக்கள் உள்ள பக்கத்தின் யூ ஆர் எல் முகவரியை காப்பி செய்து கொண்டு www.keepvid.com இணையதளத்திற்குச்சென்று மேற்படி யூ ஆர் எல் முகவரியை அளித்தால் பதிவிறக்கம் செய்ய லிங்க்கை keepvid இணையதளம் வழங்கும்.அப்படி வழங்கப்பட்ட லிங்க்கை கிளிக்செய்து தரவிறக்கம் செய்ய வேண்டியதுதான்.ஆனால் தரவிரக்கம் செய்யப்பட்ட ஃபைல் .doc என்று இருக்கும் அதை .Flv என்று மாற்றம் செய்ய வேண்டும்.மேற்படி மாற்றம் செய்யப்பட்ட ஃபைலினை FLV player கொண்டு நாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் வண்ணம் பார்க்கலாம்.
FLV player ஐ தரவிரக்க இங்கே சொடுக்குங்கள்
இன்றைய ஸ்பெஷல்:-
ஹாரிபாட்டர் நாவலின் மூன்றாவது பாகம் இங்கே ஆங்கிலத்தில் தரவிரக்க இங்கே சொடுக்குங்கள்
1 comment:
பதிவிறக்கினேன்
எளிதாகப் பதிவிறங்கியது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
Post a Comment