Monday, April 14, 2008

தமிழ் எழுத்துரு......


கணிணி நம் வாழ்க்கையில் பின்னி பிணைந்துவிட்ட ஒன்று.பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளீடு செய்வது மற்றும் வெளீயீடு செய்வது என்ற நிலை இருந்தபோதிலும் தமிழ் ஆர்வலர்களாகிய கணிப்பொறி வல்லுனர்களால் தமிழில் எழுத அவரவர் தேவைக்குத்தகுந்தார்போல் பல்வேறு விதமான எழுத்துருக்களை பயன்படுத்தி வருகின்றனர்,இதில் என்ன வேடிக்கை என்றால் எந்த எழுத்துருவும் பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்படுவதில்லை ஆதலால் ஒருவர் எந்த எழுத்துரு கொண்டு எழுதியுள்ளாரோ அதே எழுத்துரு கணிணியில் நிறுவப்பட்டிருந்தால் மட்டுமே மற்றொருவரால் அவரது கணிணியில் படிக்கமுடியும்.இதற்கு தீர்வாகத்தான் யுனிகோடு என்றழைக்கப்படக்கூடிய பொதுவானமுறை தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.யுனிகோடு முறையில் தமிழில் தட்டச்சு செய்ய இ.கலப்பை என்ற மென்பொருள் மிகவும் அதிகமாக பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இருப்பினும் என்.ஹைச்.எம்.(NHMwriter)என்ற மென்பொருள் மிக எளிதாகவும்,அனைவரும் பயன்படுத்த ஏற்ற வகையிலும் உள்ளது என்றால் அது மிகையில்லை.NHMwriter ல்Tamil99unicode,Tamilphoneticunicode,Tamiloldtypewriterunicode,Tamilbaminiunicode என நான்குவகை விசைப்பலகைகள் உபயோகிக்க ஏற்ற வகையில் உள்ளது.
நிறுவுவதும் மிகச்சுலபம்.NHMwriterஐ கணிப்பொறியில் நிறுவிய உடன் டாஸ்க்பாரின் வலதுபக்கத்தில் மணிபோன்ற அமைப்பு இருக்கும் அதனை வலது கிளிக் செய்ய மேற்கூறிய நான்குவகை விசைப்பலகைகள் தோன்றும்.தேவையான விசைப்பலகையை தேர்ந்தெடுத்து உங்களது எண்ணங்களை தமிழில் உள்ளீடலாம்.இது வலைத்தளங்களிலும் பயன்படுத்த எளிமையானது.
பயன்படுத்திபாருங்கள்.இங்கே தரவிறக்கவும்

மேலும் NHMwriterஐ பற்றி அறிய இங்கே சுட்டுங்கள்

இன்றைய ஸ்பெஷல்:-

ஹாரிபாட்டர் இரண்டாம்பாகம் ஆங்கிலத்தில் இங்கே தரவிறக்கவும்

No comments: