Sunday, September 28, 2008

யு எஸ் பி டிரைவ்........













யூ எஸ் பி டிரைவ்,பென் டிரைவ் என்றழைக்கப்படக்கூடிய டிரைவ்கள் இன்று பலவிதங்களில் பல அளவுகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.அவற்றின் மூலமாக தகவல்களினை காப்பி செய்வதும் மிகச்சுலபம்.அலுவலகங்களில் பாதுகாக்கப்பட வேண்டிய பல்வேறு தகவல்களும் உயரதிகாரிகளுக்குத்தெரியாமலேயே வெளியே செல்வதற்கு இது பயனளிக்கும்.
இதை தடுக்க வழி உள்ளதா?எனில் உள்ளது என்பது பதிலாகும்.
எப்படி தடுப்பது விண்டோஸ் எக்ஸ்பி எஸ்பி 2 ஆபரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட்ட கணிணியில் பதியப்பெற்ற டேட்டாவினை யூஎஸ்பி டிரைவின் உதவியோடு யாரும் காப்பி செய்யாதவாறு தடுக்கலாம்.
ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து ரன் ஆப்ஷனை தேர்வு செய்து ரன் விண்டோவில் Regedit என்று தட்டச்சு செய்யவும்.ஓகே பட்டனை கிளிக் செய்யவும். Registry editor விண்டோவில் HKEY_LOCAL_MACHINE\SYSTEM\current control set\Controlஎன்ற இடத்திற்குச்சென்று வலது பக்க பேனலில் கர்சரை வைத்து வலது கிளிக் செய்து நியூ மற்றும் கீ ஆப்ஷன்களினை பயன்படுத்தி StorageDevicePolicies என்ற பெயரில் புதிய கீயை உருவாக்கிக்கொள்ளவும்.பின் இடது பக்க பேனலில் புதிதாக உருவாக்கப்பட்ட StorageDevicePolicies என்ற கீயின் மீது கர்சரை வைத்து வலது கிளிக் செய்து நியூ மற்றும் DWORD Value ஆப்ஷன்களினை பயன்படுத்தி புதிதாக DwordValue வை உருவாக்கி கொள்ளவும்.Edit DWORD Value விண்டோவில் Value Name என்பதற்கு கீழே உள்ள சிறிய கட்டத்தில் 1என்று தட்டச்சு செய்து ஓகே பட்டனை கிளிக் செய்யவும்.Registry Editorவிண்டோவை மூடிவிட்டு கணிணியை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்யவும்.இனி யூ எஸ்பி போர்ட் மூலமாக பெண்டிரைவில் டேட்டாக்களினை காப்பி செய்ய முடியாது.

இன்றைய ஸ்பெஷல்:-

அமரர் சுஜாதா எழுதிய சிறுகதைகள் தொகுப்பு இங்கே மின் னூல் வடிவில் உங்களுக்காக. இங்கே தரவிரக்கவும்.

கணிப்பொறியின் வேகத்தினை அதிகரிக்க.....





டிஃபிராக்மென் ட் பயன்பாடு அனைவரும் அறிந்ததே.விண்டோஸ் இயங்கு தளத்தில் உள்ள டிஃபிராக்மென் ட் பயன்பாட்டினை எல்லோரும் பயன்படுத்தி இருப்போம்.ஆனால் டிஃபிராக்மென் ட்ஆவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.ஹார்டிஸ்கில் கன்னாபின்னாவென்று இடம் பெற்றுள்ள தகவல்களினை இடம் மாற்றி வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்துவது தான் டிஃபிராக்மென் ட் செயல்பாடு.வேகம் குறைவாக உள்ள கணிணியில் டிஃபிராக்மென் ட் செய்தபின் வேகம் அதிகரித்திருக்கும்.இந்த விண்டோஸ் பயன்பாட்டிற்கு ஓர் மாற்று பயன்பாடு தான் டிஃப்ராக்லெர்.இலவச இம்மென்பொருளினை இணையிறக்கி டிஃபிராக்மென் ட் செய்து கணிணியின் வேகத்தினை அதிகரிக்கலாம்.
இந்த பயன்பாட்டினை இலவசமாக இணையிறக்கிக்கொள்ள இங்கே சுட்டுங்கள்

இன்றைய ஸ்பெஷல்:-

சி மொழி ஓர் அறிமுகம் தமிழில் சிறு மென்புத்தகமாக.இங்கே தரவிரக்கவும்

Saturday, September 27, 2008

மென்பொருள்கள்.....















விண்டோஸ் பெயிண்ட் பிரஷ் பயன்பாடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்த ஒன்று.கணிணியை உபயோகிக்க முதலில் அனைவரும் விரும்புவது பெயிண்ட் பிரஷ் மற்றும் கேம்ஸ்.அப்படிப்பட்ட பெயிண்ட் பிரஷின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு தான் பெயிண்ட் டாட் நெட்.மேம்படுத்தப்பட்ட பெயிண்ட் பிரஷ்ஷினை தரவிறக்கி உபயோகப்படுத்திப்பாருங்கள்.
இணையிறக்கிக்கொள்ள இங்கே சுட்டுங்கள்








எல்லா மென்பொருள் பயன்பாட்டிற்கும் மாற்று மென்பொருள்களோ அல்லது மேம்படுத்தப்பட்ட பதிப்போ தினம் தினம் புதியது புதியதாக வந்து கொண்டே இருக்கின்றது.அவற்றில் உள்ள நிறைகளினையும்,குறைகளினையும் கருத்தில் கொண்டு புதிய வரவுகளினை பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றோம்.அந்த வகையில் வந்துள்ளது தான் மாஃப்சாஃப்ட் ப்ரீகால்க்.விண்டோஸ் கால்குலேட்டர் அனைவராலும் பயன்படுத்தப்பட்டுள்ளது அதில் இல்லாத புதிய சிறப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட கால்குலேட்டர் இதுவாகும்.பயன்படுத்திப்பாருங்களேன்.

இணையிறக்கிக்கொள்ள இங்கே சுட்டுங்கள்





இன்றைய ஸ்பெஷல்:-

கணிப்பொறி ஓர் அறிமுகம் இனிய தமிழில் இங்கே உங்களுக்காக மின் நூல் வடிவில் இங்கே தரவிரக்கவும்.