Showing posts with label 6PC. Show all posts
Showing posts with label 6PC. Show all posts

Saturday, September 6, 2008

ஆறாவது ஊதியக்குழு-ஓர் பார்வை

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அது அரசிதழிலும் சிற்சில மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.மத்திய அரசு அறிவித்த அதே சூட்டோடு தமிழகம் முதற்கொண்டு அரியானா போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கும் 01.01.2006 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வினை அளிப்பதாகத்தெரிவித்து தமிழக அரசு ஓர் குழுவினை அமைத்து அரசாணையும் வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு,அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை எப்படியெல்லாம் குறைக்கப்பட்டு அறிவித்துள்ளது என்ற ஓர் ஒப்பீடினை பாருங்கள்

தற்போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற அகவிலைப்படி உயர்வு:-

From 1-1-2006- 24%

From 1-7-2006-29% [5%]

From 1-1-2007-35% [6%]

From 1-7-2007-41% [6%]

From 1-1-2008-47% [6%]

From 1-7-2008-55% [8%]


அரசிதழில் வெளியிடப்பட்டு தற்போது அரசு ஊழியர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு

From 1-1-2006-No DA

From 1-7-2006-2%

From 1-1-2007-6% [4%]

From 1-7-2007-9% [3%]

From 1-1-2008-12%[3%]

இதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால் 01.07.2006 ல் வழங்க வேண்டிய அகவிலைப்படியில் 60% அளவு குறைக்கப்பட்டுள்ளது.அதேபோல் 1-1-2007,01.07.2007,01.01.2008,ல் வழங்கவேண்டிய அகவிலைப்படியில் முறையே 33.33%,50% ,50%, குறைக்கப்பட்டுள்ளது .01.07.2008 ல் வழங்கவேண்டிய அகவிலைப்படியாக குறிப்பிடப்பட்டுள்ள உயர்வு 12%(4%)

முதலில் ஊதிய உயர்வு 40% முதல் 50% வரை இருக்கும் என அறிவித்து விட்டு பின் சுருதி இறங்கி 28% வரை இருக்கும் என தெரிவித்து இறுதியில் 21% அளவே உயர்த்தப்பட்டுள்ளது.
ஆகையினால் 33.33% முதல் 60% வரை குறைக்கப்பட்ட அகவிலைப்படி ஏற்றுக்கொள்ள இயலாது அல்லவா?

பரிந்துரைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு இப்படி இருந்திருக்க வேண்டும்.

From 1-1-2006-No DA

From 1-7-2006-4%

From 1-1-2007-5%

From 1-7-2007-5%

From 1-1-2008-5%

SIX PAY COMMISSION GAZETTE,NOTIFICATION AND RESOLUTION FOR PENSIONERS AND PENSION CALCULATOR

இன்றைய ஸ்பெஷல்:-
கர்ம வீரை காமராஜர் பற்றிய தொகுப்பு இங்கே உங்களுக்காக தமிழில் மென் நூல் வடிவில்.இங்கே தரவிரக்கவும்

Saturday, August 30, 2008

சம்பள கமிஷன்.......

இந்திய அரசாங்கத்தால் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 01.01.2006 முதல் முன் தேதியிட்டு 01.09.2008 முதல் வழங்கப்பட உள்ளது.ஊதியக்குழு பரிந்துரைகள் ஏற்கத்தக்கதாக இல்லை என அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.இந்த நிலையில் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட பரிந்துரைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.ஊதியக்குழு பரிந்துரைகளினை பார்க்கும் பொழுது அடித்தள பணியாளர்களுக்கான ஊதிய விகிதங்களில் மாற்றம் அதிகமில்லாத போதிலும் அரசு உயரதிகாரிகளுக்கான சம்பளவிகிதம் முந்தைய ஊதியக்குழு பரிந்துரைகள் போலவே மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது தெரியவரும்.வளர்ந்து வரும் நாடான நமக்கு சம்பளவிகிதம் அதிகமாகத்தோன்றினாலும் அரசாங்கத்தால் செய்யப்படுகின்ற,அரசியல்வாதிகளால் செய்யப்படுகின்ற ஊதாரிச்செலவுகள் மிக அதிகம் அல்லவா?பணவீக்கவிகிதம் இரட்டை இலக்கைத்தாண்டி சென்செக்ஸ் குறியீட்டினைப்போல் உயர்ந்துகொண்டே வருகிறது.நிதியமைச்சரே பணவீக்கத்தினைக்குறைக்க பலவழிகளில் முயன்றுவிட்டேன்.யாராவது பணவீக்கத்தினைக்குறைக்க வழி இருந்தால் கூறுங்கள் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது.சாதாரண கார்ப்பரேட் கம்பேனிகள் முதற்கொண்டு ஐ.டி கம்பேனிகள் வரை குறைந்தபட்ச சம்பளமே 20,000க்கு மேல்தான் தருகின்றன.இன்று விலைவாசி உயர்வுக்கும்,நிலமதிப்பு கூடுவதற்கும்,வாடகை கூடுவதற்கும் அவர்கள் பெறும் நல்ல சம்பளம் என்றால் அது மிகை இல்லை.இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு குறிப்பாக பி,சி,டி பிரிவு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஏற்கத்தக்கதல்ல என்பதே என் எண்ணம்.

அரசிதழினை தரவிறக்க லிங்க்1 லிங்க்2,
குழு பரிந்துரைகள் தரவிறக்க

இன்றைய ஸ்பெஷல்:-

ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் பாதுகாத்துக்கொள்வது எப்படி சிறு விளக்கம் இங்கே உங்களுக்காக இங்கே தரவிறக்குங்கள்.