Wednesday, October 8, 2008

அனுப்பிய மெயில் படிக்கப்பட்டதா என அறிய.....


மாங்கு மாங்கென்று கடிதம் எழுதி அதை போஸ்ட் செய்து அது இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் கழித்து போய்சேர்ந்து பிறகு படிப்பார்கள்.அது சிறிது முன்னேறி ரெஜிஸ்டர் போஸ்ட்,ஸ்பீட் போஸ்ட் என்றாகி தற்போது கூரியர் சர்வீஸ் வந்தது தொலை பேசி யுகமான இக்காலத்தில் கடிதம் எழுதும் பழக்கத்திற்கே வேட்டு வைத்துவிட்டது.

இருப்பினும் இணையகாலத்தில் இ.மெயிலில் கடிதம் அனுப்புவது வாழ்த்து அனுப்புவது வேலைக்கு விண்ணப்பிப்பது மற்றும் அலுவல் சார்ந்த பணிகளுக்கு கடிதம் அனுப்புவது ஆகியவை அதிகம் நடைபெற்று வருகிறது.
ஆனால் மெயில் போய் சேர்ந்ததா?நாம் அனுப்பியவர்கள் படித்தார்களா?என்றறிவது அவர்கள் பதில் மெயில் அனுப்பித்தால் தான் தெரியும்.
அதற்கு உதவுவது தான் இந்த ஸ்பைபிக் தளம்(SPYPIG).இது ஒரு இலவச சேவைதான்.

முதலில் எப்போதும் போல் மெயிலை தட்டச்சு செய்து தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.பின் மேற்கூறிய இணைய தளத்திற்குச்செல்லவேண்டும்.அங்கு உங்கள் முகவரி ,யாருக்கு மெயில் அனுப்ப வேண்டுமோ அவரதி இமெயில் முகவரி ஆகியவற்றினை கொடுக்க வேண்டும்.
பின் அவர்கள் கொடுத்துள்ள படங்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.அதில் உள்ள வெற்றுப்படத்தினை தேர்வு செய்தால் நாம் ட்ராக் செய்வது அவர்களுக்கு தெரியாது.மற்றப்படங்களினை தேர்வு செய்தால் நாம் ட்ராக் செய்வது தெரியும்.சூழ்நிலைக்குத்தக்க படங்களினைத்தேர்வு செய்வது அவசியம்.பின் "Click to activate My Spypig"என்பதினைக் கிளிக் செய்ய வேண்டும்.இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்தெடுத்த படம் காட்டப்படும்.அதனை காப்பி செய்து கொள்ளவும்.ஏற்கனவே தட்டச்சு செய்து வைத்துள்ள மெயிலினை திறந்து காப்பி செய்து வைத்துள்ள படத்தினை ஒட்டி உடனே மெயிலினை அனுப்பிவிட வேண்டும்.அவ்வளவுதான்.

யாருக்கு நீங்கள் மெயிலினை அனுப்பினீர்களோ அவர்கள் அந்த மெயிலினை திறந்து படித்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார்,எப்பொது படித்தார் என்பது போன்ற தகவல்கள் உங்கள் மெயிலிற்கு வந்து சேர்ந்து விடும்.
தள முகவரி:-SPYPIG

இன்றைய ஸ்பெஷல்:-

வாஸ்து சாஸ்திரம் பற்றிய மின் நூல் இங்கே தமிழில் உங்களுக்காக
இங்கே தரவிரக்கவும்.


Thursday, October 2, 2008

எந்திரன்......

எந்திரன்....ஷங்கர்,அமரர் சுஜாதா மற்றும் சூப்பர் ஸ்டார் காம்பினேஷனில் உருவாகும் தமிழ் படம்.இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.படப்பிடிப்பில் படம்பிடிக்கப்பட்ட படங்கள் இங்கே உங்களுக்காக..


இன்றைய ஸ்பெஷல்:-

இரமணிச்சந்திரன் எழுதிய”நின்னையே ரதி என்று...”நாவல் மென் புத்தகமாக இங்கே உங்களுக்காக.இங்கே தரவிரக்கவும்.