Saturday, August 30, 2008

குறைபாடுகள்-குறைய.......


எங்கும் கணிணி எதிலும் கணிணி என்றாகிவிட்ட இக்காலத்தில் அரசு நிறுவனங்கள்,அரசு அலுவலகங்கள் ,அரசுத்துறை பொது நிறுவனங்கள் ஆகியவற்றில் ஏற்படும் குறைகளினை எத்தனை முறை நேரில் சென்று தெரிவித்தாலும் குறைகள் களையப்பட மாட்டாது.ஆனால் தற்போது இவ்விணைய காலத்தில் கணிணிமூலமாக அதிகாரப்பூர்வ இணையத்தளங்களில் சென்று குறைகளினைத்தெரிவிக்கும் போது அவர்களது செயல்பாடு பிரம்மிக்கத்தக்க வகையிலேயே உள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் சேமிப்புக்கணக்கு வைத்துள்ளேன்.அதற்கு ஏடிஎம் கார்டும் வைத்திருந்தேன்.பயணம் செய்தபோது அவ் ஏடிஎம் என்னை அறியாமல் எங்கோ தவற விட்டுவிட்டேன்.ஆனால் உடனடியாக வங்கியினை தொடர்புகொண்டு கார்டினை டிஆக்டிவேட் செய்ததுடன் புதிய கார்டு கேட்டு விண்ணப்பிக்கவும் செய்தேன்.நாட்கள் பலவாயிற்று,கார்டுதான் வரவில்லை.அப்போது தான் விவரங்களினைத்தெரிவித்து ஐசிஐசிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக குறைபாட்டினைத்தெரிவித்து மெயில் செய்தேன்.அதற்கு உடனடியாக பதிலளித்த வங்கி தொடர்பாளர்கள் உடனடியாக எடிஎம் கார்டினை அனுப்பித்தார்கள்.
அதே போன்று மற்றொரு அனுபவம் சமையல் எரிவாயு கனெக் ஷன் பெறுவதில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தாரிடம் கருத்து வேற்றுமை நிலவிய போது அப்போதும் கைகொடுத்தது இணையவழித்தொடர்புதான்.உடனடியாக பதில் பெறப்பட்டதுடன் பலனும் நல்லமுறையில் கிடைத்தது.நன்றி ஐசிஐசிஐ மற்றும் ஹைச்பி .
தற்போது இந்திய அரசால் குறைகளினைக்களைய அதிகாரப்பூர்வ இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.துறைவாரியாக,மாநிலம் வாரியாக நமக்குள்ள குறைகளினைக்களைய நடவடிக்கை எடுக்க கோரலாம்.நம் விண்ணப்பத்திற்கு ஓர் எண் கொடுப்பதுடன்,நம் கோரிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவ்வப்போது பார்த்துக்கொள்ளலாம்.கவனித்து வையுங்கள் எப்போதாவது உதவும்,தெரிந்தவர்களிடமும் தெரிவியுங்கள். தள முகவரி http://pgportal.gov.in/
இன்றைய ஸ்பெஷல்:-
யசூர்,சாம,அதர்வண வேதங்கள் இங்கே உங்களுக்காக .தரவிரக்கவும்