Monday, March 24, 2008

சொத்துவரி உயர்வு........சில வினாககள்....சில சந்தேகங்கள்...

ராக்கெட் வேகமா விலைவாசி ஏற்றம் வேகமா என்ற நிலை தற்போது நிலவுகின்ற நிலையில் தற்போது அடுத்த கட்டமாக தமிழ்நாட்டுப்பகுதிகளில் பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சிப்பகுதிகளில் சொத்துவரி 01.04.2008 முதல் உயர்த்த நடவடிக்கை மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.இதற்கு முன் 1993 மற்றும் 1998 ஆகிய வருடங்களில் சொத்துவரி உயர்த்தப்பட்டது.அவ்வரிசையில் 2003 ஆம் ஆண்டு சொத்து வரி உயர்வு அமலாக்கப்பட்டு இருக்க வேண்டும்.ஆனால் அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து வந்த தேர்தலை மனதில் கொண்டு மேற்படி 2003 ஆம் ஆண்டில் நடைபெற்று இருக்க வேண்டிய சொத்து வரி சீர்திருத்தம் தொடக்க நிலையிலேயே கைவிடப்பட்டது.இந்நிலையில் தான் 01.04.2008 முதல் சொத்து வரி சீர்திருத்தம் அமல் படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த சீர்திருத்தம் தேவையா?என்ற வினா எழுகிறது.அதற்கான விளக்கம்

நகராட்சிப்பகுதியிலோ ,மாநகராட்சிப்பகுதியிலோ,பேரூராட்சிப்பகுதியிலோ உள்ள அனைத்துக்கட்டடங்களுக்கும் சொத்துவரி விடுதலின்றி சேர்க்கப்பட்டுள்ளதா?.எனில் இல்லை என்பதுதான் உண்மை.

மேலும் சொத்துவரி விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிதாரர்களும் நிலுவையின்றி சொத்துவரி செலுத்தியிருக்கிறார்களா?..என்றால் அதற்கும் பதில் இல்லை..

154 நகராட்சிகளிலும் 100% சொத்துவரி வசூல் செய்த நகராட்சிகளின் எண்ணிக்கை நம் ஒருகை விரல்களின் எண்ணிக்கையைக்கூட தொடாது என்பது தான் உறைய வைக்கும் உண்மை..வரிவிதிக்கப்பட்டு கேட்பு எழுப்பப்பட்டுள்ள அனைத்து வரிதாரர்களிடமும் இருந்து வரியை வசூல் செய்தாலே இந்த புதிய சொத்துவரி திருத்தம் தேவைப்படாது.

மேலும் நகராட்சிப்பகுதிகளில் ஒரே அளவுள்ள கட்டடங்களுக்கு வரி பாரபட்சமாக கவனிப்புக்குத்தக்கவாறு போடப்பட்டிருக்கும் என்பது உண்மையான உண்மை.இந்த வரிவிதிப்பு முறையை ஒழுங்கு படுத்தாதவரைக்கும் எத்தனை திருத்தங்கள் வந்தாலும் முழுமையாக சொத்துவரி சீராய்வு நடத்தப்பட இயலாது.

உதாரணமாக வீடு எனக்குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆனால் அது வியாபார ஸ்தலமாக இருக்கும் அதே போல் அடுக்கு மாடி கட்டப்பட்டு இருக்கும் ஒரு வீடு உள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டு இருக்கும்.அதனை நேர் செய்தாலே போதும்.நகராட்சியின் நிதி நிலைமை சீராக..

யாரேனும் முயன்று பாருங்களேன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக ஏதேனும் நகராட்சிப்பகுதியில் 1993,1998 ஆகிய வருடங்களில் சொத்துவரி சீரமைக்கப்பட்ட பின்னும் ,முன்னும் மற்றும் பிற வருடங்களிலும் சொத்து வரி விதிக்கப்பட்ட வரி விதிப்பு தாரர்களின் எண்ணிக்கை ,வசூல் செய்யப்பட்ட தொகை மற்றும் எண்ணிக்கை?
குறைந்து இருக்கும் என்பது தான் எனது முடிவு...


இந்நிலையில் இந்த வரி உயர்வு தேவையா...முடிவு உங்கள் கையில்.....


இன்றைய ஸ்பெஷல்:

சுஜாதாவின் ஆ.... நாவல் இங்கே இ.புத்தகமாக இங்கே பதிவிறக்குங்கள்..

No comments: