Monday, March 31, 2008

தவறுகளின் வேறு வடிவம்-ஒரு பார்வை

தவறுதல் மனித இயற்கை.தெரியாமல் செய்வதற்குப்பெயர் தான் தவறு.தவறு என்றே தெரிந்து செய்வதற்கு பெயர் தவறில்லை அது கொழுப்பு.சில தவறுகள் கண்டுபிடிப்பாகக்கூட மாறுவதுண்டு.இங்கே சில தவறுகள் மற்றும் அதன் முடிவுகளைக்காண்போமா?

If a barber makes a mistake,
It's a
New Style

If a driver makes a mistake,
It is a
New path

If a engineer makes a mistake,
It is a
New Venture

If parents makes a mistake,
It is a
New Generation

If a politician makes a mistake,
It is a
New Law

If a scientist makes a mistake,
It is a
New Invention

If a tailor makes a mistake,
It is a
New Fashion

If a teacher makes a mistake ,
It is a
New Theory

If our boss makes a mistake,
It is a
New Idea

If an employee makes a mistake,
It is a
Mistake Only

இன்றைய ஸ்பெஷல்:-

சமையல் புத்தகங்கள்:-

30 வகை அழகு மற்றும் ஆரோக்கிய உணவுகள்:-
தரவிறக்க

30 வகை பருப்பு சமையல்
தரவிறக்க

30 வகை முட்டை சமையல்
தரவிறக்க

Monday, March 24, 2008

சொத்துவரி உயர்வு........சில வினாககள்....சில சந்தேகங்கள்...

ராக்கெட் வேகமா விலைவாசி ஏற்றம் வேகமா என்ற நிலை தற்போது நிலவுகின்ற நிலையில் தற்போது அடுத்த கட்டமாக தமிழ்நாட்டுப்பகுதிகளில் பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சிப்பகுதிகளில் சொத்துவரி 01.04.2008 முதல் உயர்த்த நடவடிக்கை மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.இதற்கு முன் 1993 மற்றும் 1998 ஆகிய வருடங்களில் சொத்துவரி உயர்த்தப்பட்டது.அவ்வரிசையில் 2003 ஆம் ஆண்டு சொத்து வரி உயர்வு அமலாக்கப்பட்டு இருக்க வேண்டும்.ஆனால் அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து வந்த தேர்தலை மனதில் கொண்டு மேற்படி 2003 ஆம் ஆண்டில் நடைபெற்று இருக்க வேண்டிய சொத்து வரி சீர்திருத்தம் தொடக்க நிலையிலேயே கைவிடப்பட்டது.இந்நிலையில் தான் 01.04.2008 முதல் சொத்து வரி சீர்திருத்தம் அமல் படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த சீர்திருத்தம் தேவையா?என்ற வினா எழுகிறது.அதற்கான விளக்கம்

நகராட்சிப்பகுதியிலோ ,மாநகராட்சிப்பகுதியிலோ,பேரூராட்சிப்பகுதியிலோ உள்ள அனைத்துக்கட்டடங்களுக்கும் சொத்துவரி விடுதலின்றி சேர்க்கப்பட்டுள்ளதா?.எனில் இல்லை என்பதுதான் உண்மை.

மேலும் சொத்துவரி விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிதாரர்களும் நிலுவையின்றி சொத்துவரி செலுத்தியிருக்கிறார்களா?..என்றால் அதற்கும் பதில் இல்லை..

154 நகராட்சிகளிலும் 100% சொத்துவரி வசூல் செய்த நகராட்சிகளின் எண்ணிக்கை நம் ஒருகை விரல்களின் எண்ணிக்கையைக்கூட தொடாது என்பது தான் உறைய வைக்கும் உண்மை..வரிவிதிக்கப்பட்டு கேட்பு எழுப்பப்பட்டுள்ள அனைத்து வரிதாரர்களிடமும் இருந்து வரியை வசூல் செய்தாலே இந்த புதிய சொத்துவரி திருத்தம் தேவைப்படாது.

மேலும் நகராட்சிப்பகுதிகளில் ஒரே அளவுள்ள கட்டடங்களுக்கு வரி பாரபட்சமாக கவனிப்புக்குத்தக்கவாறு போடப்பட்டிருக்கும் என்பது உண்மையான உண்மை.இந்த வரிவிதிப்பு முறையை ஒழுங்கு படுத்தாதவரைக்கும் எத்தனை திருத்தங்கள் வந்தாலும் முழுமையாக சொத்துவரி சீராய்வு நடத்தப்பட இயலாது.

உதாரணமாக வீடு எனக்குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆனால் அது வியாபார ஸ்தலமாக இருக்கும் அதே போல் அடுக்கு மாடி கட்டப்பட்டு இருக்கும் ஒரு வீடு உள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டு இருக்கும்.அதனை நேர் செய்தாலே போதும்.நகராட்சியின் நிதி நிலைமை சீராக..

யாரேனும் முயன்று பாருங்களேன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக ஏதேனும் நகராட்சிப்பகுதியில் 1993,1998 ஆகிய வருடங்களில் சொத்துவரி சீரமைக்கப்பட்ட பின்னும் ,முன்னும் மற்றும் பிற வருடங்களிலும் சொத்து வரி விதிக்கப்பட்ட வரி விதிப்பு தாரர்களின் எண்ணிக்கை ,வசூல் செய்யப்பட்ட தொகை மற்றும் எண்ணிக்கை?
குறைந்து இருக்கும் என்பது தான் எனது முடிவு...


இந்நிலையில் இந்த வரி உயர்வு தேவையா...முடிவு உங்கள் கையில்.....


இன்றைய ஸ்பெஷல்:

சுஜாதாவின் ஆ.... நாவல் இங்கே இ.புத்தகமாக இங்கே பதிவிறக்குங்கள்..

Sunday, March 23, 2008

எனக்கு பிடித்த பாடல்கள்......

அன்பிற்குரியவர்களே!

மனம் சலனப்படும்போதும்,சஞ்சலப்படும் போதும் மனத்தை இலேசாக்க பயன்படும் வழிகள் இரண்டு.
ஒன்று இறைவனிடம் இறைஞ்சுவது
மற்றொன்று மனதிற்கினிய பாடல்களினை கேட்பது
அவ்வகையில் என் மனதிற்கு இதமளிக்கக்கூடிய பாடல்களின் தொகுப்பு
இதோ

பாடல்1:- நிவேதா ... (Nivedha(Nee Pathi Nan Pathi)
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=3gyLahpLRb0

பாடல்2:- பச்சைகிளிகள் தோளோடு(Pachaikiligal Tholodu (இந்தியன்)
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=sG9qHzczhoM

பாடல்3: முரட்டுகாளை...murattukalai
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=8TBioAh0daQ

பாடல்4:- சம்சாரம் என்பது வீணை samsaram enbathu (மயங்குகிறாள் ஒரு மாது)
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=1EjUkL91k9M

பாடல்5:-காதல் கடிதம் ...kathal kaditham(ஜோடி)(Jodi)
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=gg07Np9N3ns

பாடல்6:-நீ தூங்கும் நேரத்தில்....nee thungum nerathil
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=CLgcabVc0qE

பாடல்7:-இந்த பச்சைகிளிக்கொரு....intha pachaikilikko
பாருங்கள்:-....http://www.youtube.com/watch?v=y3o8uAi71rg

பாடல்8:-இந்த பச்சைகிளிக்கொரு(பெண்)....intha pachaikilikko
பாருங்கள்:-....http://www.youtube.com/watch?v=jf83JDXhm0w

பாடல்9:-தாழம் பூவே வாசம் வீசு...Thalam poovae vasam veesu
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=vxvYQH12R-E

பாடல்10:-நூலும் இல்லை வாலும் இல்லை...nuulim illai valum illai
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=vGAe4xiqMp4

பாடல்11:-வசந்தம் பாடி வர....vasantham padi vara
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=8YaQZ1row-o

பாடல்12:-வசந்தம் பாடி வர(ஆண்)...vasantham padi vara(male)
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=Su3kULKLQsM

பாடல்13:-நிழலினை நிஜமும்(ராம்)....nilalina nijamum
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=dzbSkK1MjCU

பாடல்14:-யாமினி யாமினி.....yamini yamini
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=J39-1WDKPmQ

பாடல்15:-ஒரு பொய்யாவது சொல்....orupoiyaavathu sol
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=MwU0OXTOZFw

பாடல்16:-தய்யதா தய்யதா....(திருட்டு பயலே..)thaiyatha thiayatha
பாருங்கள்.......http://www.youtube.com/watch?v=MIg_G3Br5wk

பாடல்17:-திரு திருடா...(5ஸ்டார்ஸ்)Thiru thiru da
பாருங்கள்.......http://www.youtube.com/watch?v=8RiKtFoKtag

பாடல்18:-ரவிவர்மன் எழுதாத ravivarman ezuthatha
பாருங்கள்.......http://www.youtube.com/watch?v=QVqPURYjyRs

பாடல்19:-நீதானே எந்தன் பொன் வசந்தம்..neethanae enthan ponvasantham
பாருங்கள்.......http://www.youtube.com/watch?v=HQJSfx8UyFw

பாடல்20:-இதயமே இதயமே thayamee ithayamee
பாருங்கள்.......http://www.youtube.com/watch?v=SuTnZx8I6QM


பாடல்21:-பூங்காற்று புதிதானது poonkattru puthithanathu
பாருங்கள்.......http://www.youtube.com/watch?v=xs9jkmR8Kmw


பாடல்22:-வசந்தகாலங்கள் vasantha kalangkal
பாருங்கள்.......http://www.youtube.com/watch?v=Sfnea7ukXKw

பாடல்23:-அற்றைத்திங்கள்(சிலப்பதிகாரம்)attraithingal
பாருங்கள்.......http://www.youtube.com/watch?v=05Cz4aQZKIg


பாடல்24:-இதோ இதோ நெஞ்சிலே Itho itho nenjilae
பாருங்கள்.......http://www.youtube.com/watch?v=1PcgsqLpXYo

பாடல்25:-நலம் வாழ என்னாளும்(மறுபடியும்)nalam vazha ennalum
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=Y2cu2bfd2XM

பாடல்26:-பனி விழும் மலர்வனம் panivizhum malarvanam
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=rZ8tpb9-WUw


பாடல்27:-தவமின்றி கிடைத்த வரமே..thavamindri kidaththa varamae
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=8EizoQqAJcw

பாடல்28:-வளையோசைகலகல.... valaiyoosai kalakala
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=ZVxGeJznWSU

பாடல்29:-என் இனிய பொன் நிலாவே...Eniniya pon nilavae
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=FYgiCdqi77s


பாடல்30:-என்ன அழகு எத்தனை அழகு....Enna azhagu ethhanai azhagu
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=xDi7mxT9aWU

பாடல்31:-ஏன் பெண்ணெண்று....yaan pennendru
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=kTSDDOdMxbQ

பாடல்32:-நெஞ்சுக்குள்ளே இன்னாறென்று...Nenjukkulla innnarendru
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=HHJ7MBFVLEc


பாடல்33:-இது ஒரு நிலாக்காலம்....ithu oru nila kalam
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=wOqcPfBGSBo

பாடல்34:-இளமை எனும் பூங்காற்று....ilamai enum poongatru
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=PAbjxkWw33U

பாடல்35:-அந்தி மழை பொழிகிறது....anthi malazhai pozhikirathu
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=bbtJ8MLAAos

பாடல்36:-ஓ வசந்த ராஜா...oh vasantha raja
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=TaGMHu9QMIs

பாடல்37:-ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்....thalatturm thendral
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=TaGMHu9QMIs

பாடல்38:-சக்கரை நிலவே .....sarkkarai nilavae
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=OYjsS7dMjEw


பாடல்39:-மெட்டி ஒலி காற்றோடு....metti oli kattrodu
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=UgfQXk2PAHo

பாடல்40:-என்னை தாலாட்ட வருவாளா...Ennai thalatta varuvala
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=AsVcZKAM3fc

பாடல்41:-காதலின் தீபம் ஒன்று....kathalin theebam ondru
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=XH6oMj2joDs


பாடல்42:-டிங் டாங் கோவில் மணி.....ding dong kovil mani
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=0cEktgEYGu0

பாடல்43:-செந்தாழம் பூவில் ....senthalam poovil vanthadum
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=92zkKYYJkqU

பாடல்44:-வெயிலோடு விளையாடி......veyilodu vilaiyadi
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=5GdlbfrDm9c

பாடல்45:-ஆசையை காத்துல தூது விட்டு....asaia kathula thuthuvittu
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=UqOI-2PoqNk

பாடல்46:-கனாக்கண்டேனடி தோழி.....kanakandenadi thozhi
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=3NqzIoIuYyE

பாடல்47:-பூவே செம்பூவே...poovae sempoovae
பாருங்கள்......http://www.youtube.com/watch?v=i9S0m7f1IVk


இன்றைய ஸ்பெஷல்:சமைத்து பாருங்கள் .....சமையல் கலை
வல்லுனர்கள் எழுதியுள்ள புத்தகங்கள்

30 வகை தோசை :இங்கே பதிவிறக்குங்கள்
30 வகை சப்பாத்தி :இங்கே பதிவிறக்குங்கள்
30 வகை டிஷஸ் :இங்கே பதிவிறக்குங்கள்
30 வகை டிபன் :இங்கே பதிவிறக்குங்கள்
30 வகை பஜ்ஜி,பக்கோடா :இங்கே பதிவிறக்குங்கள்

Tuesday, March 18, 2008

படித்ததில் பிடித்தது......

ஜாதி, மத பேதங்களை கடந்து இந்திய அளவில் எனக்கு மிகப் பிடித்தமான மனிதர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள். உலக அளவில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.ஐன்ஸ்டீன் தன் மரணப்படுக்கையிலும் கடைசி நொடிவரை கணக்குகளாய் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார் என்பார்கள். அவர் மூளையை ஆராய ஆர்வம் கொண்ட Dr.Thomas Harvey ஐன்ஸ்டீனின் மரணத்துக்கு பின் திருட்டுத் தனமாய் அவர் மூளையை எடுத்து வைத்துக்கொண்டாராம். இன்றும் அது Princeton Hospital Pathology lab-ல் இருக்கின்றது.ஐன்ஸ்டீனின் வார்த்தைகள் பொதுவாய் நகைச்சுவையும் அர்த்தமும் செறிந்ததாய் இருக்கும். இங்கே சில உதாரணங்கள். எளிய தமிழில்.ஐன்ஸ்டீன் சொல்கிறார்.....எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Zஅதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள் தாம்.காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே வழிகாட்ட சிறந்த வழி.நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein).....

Saturday, March 1, 2008

Tamil songs

Any body wants tamil mp3 send me a mail ,i will upload the songs

அரசு அலுவலகங்களில் அனுபவங்கள்!

பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடன் தொடர்பில் இருப்பவை அரசு அலுவலகங்கள்....
பிறப்பு சான்று வாங்க நகராட்சி அலுவலகம்
வாரிசு சான்று வாங்க தாலுகா அலுவலகம்
இப்படி எந்த சான்றோ அல்லது அரசால் அறிவிக்கப்படும் அனைத்து நலத்திட்டங்களினையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பவை அரசு அலுவகலகங்கள்?
இப்படிப்பட்ட அலுவலகங்களில் சென்று வேலையை முடிப்பதற்குள் நாம் பாடும் பாடு அந்தோ பரிதாபம்.
உங்களுக்கு நேர்ந்த அனுபவங்களினை இங்கு பதிவு செய்யுங்கள்!