Friday, June 13, 2008

டிஜிட்டல் போட்டோக்களினை ஸ்கிரின் சேவராக்க.....


டிஜிட்டல் கேமிரா மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களினை ஓரே கிளிக்கில் வால்பேப்பராக்க இன்றைய கணிணியில் வசதிகள் உள்ளன.எந்தபடத்தினையும் வலது கிளிக் செய்தால் "Set as Desktop Background" என்ற வசதி அப்படத்தினை கணிணியின் வால்பேப்பராக(Wallpaper)ஆக மாற்றும்.

ஆனால் டிஜிட்டல் கேமிராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களினை ஸ்கிரீன் சேவராக கணிணியில் ஓட விடலாம்.அதற்கு உதவக்கூடிய மென்பொருள் போட்டோமிஸ்டர்(Photomeister.)
கூகுள் வழங்கும் இலவசமென்பொருளான பிக்காசா மென்பொருள் உங்களிடமிருந்தால் அவை இது மாதிரி தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்களினை கணிணியில்
ஸ்கிரின் சேவராக ஓட விட வசதிஅளிக்கின்றது.ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமாக வசதி வாய்ப்புகளோடு .SCR வடிவில் உங்கள் பிரியமான படங்களினை ஸ்கிரீன் சேவராக மாற்ற இந்த மென்பொருள் மிகபயனுள்ளது என்றால் அது மிகையில்லை.

இந்த மென்பொருளினைப்பயன்படுத்தி உருவாக்கும் Screen Saver க்கு பலவித எபெக்ட்கள் கொடுக்கலாம்.போட்டோ தலைப்புகள் போட்டுக்கொள்ளலாம்.நமக்குப்பிடித்த பாடல்களினை பின்னணியில் பாட விடலாம்.இது போன்ற பலவசதிகள் உள்ளன.பயன்படுத்திப்பாருங்கள்.பயன்பெறுங்கள்.

Home Page:- http://www.photomeister.com

Link :- http://www.photomeister.com/download/index_eng.html


இன்றைய ஸ்பெஷல்:

இலந்தை சு இராமசாமி எழுதிய கைலாய தரிசனம் பயண நூல் தமிழில் சிறு மென்புத்தகமாக இங்கே உங்களுக்காக தரவிரக்க

புகைப்படத்தில் நேரம் நாள் குறிக்க.....



டிஜிட்டல் புரட்சியான இந்த காலத்தில் விதவிதமான டிஜிட்டல் கேமிராக்கள் தற்போது அதிக அளவில் குறைந்த பொருள்செலவில் கிடைக்கின்றன.பிலிம் செலவின்றி பிரிண்ட் போடும் செலவின்றி வித விதமாக வேண்டும் நேரங்களில் வேண்டும் இடங்களில் புகைப்படம் எடுத்து அதனை கணிணியில் பதிவு செய்தோ அல்லது சிடியில் பதிவு செய்தோ வைத்திருக்கலாம்.

உதாரணமாக குழந்தைகள் வளர்வதினை வாரவாரியாகவோ அல்லது மாதவாரியாகவோ வரிசையாக படம்பிடித்து வைக்கலாம்.நம் நினைவுகளினை டிஜிட்டல் இமேஜ்களாக நாம் பத்திரப்படுத்திவைக்கலாம்.ஆனால் அவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களினை நாம் ஏதெனும் பெயர் கொடுத்து மட்டுமே சேமிப்போம்.

சில வருங்களுக்குப்பிறகு நாம் அந்த புகைப்படங்களினைப்பார்க்கும் போது எந்த காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் நமக்கு சீக்கிரம் புலப்படாது.அந்த நேரங்களில் தேதிவாரியாக நேரம்வாரியாக சேமிக்கவில்லையே என்ற குறை நமக்கு ஏற்படும்.அந்த குறையைப்போக்க சில இலவச சாப்ட்வேர்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

டிஜிட்டல் கேமிராக்களில் எடுக்கப்படும் ஜெபிஜி (JPG) கோப்பானது வெறும் படத்தினை மட்டும் கொண்டிருப்பதில்லை.சில பல தகவல்களும் தன்னகத்தே மறைவாகக்கொண்டுள்ளது.உதாரணமாக படம் எப்போது எடுக்கப்பட்டது(நாள்,நேரம் எல்லாம் துல்லையமாக),பிளாஷ் பயன்படுத்தப்பட்டுள்ளதா?இல்லையா?போன்ற தகவல்களினையும் அது உள்ளடக்கி இருக்கும்.இந்த தகவல்களினை மெட்டா டேட்டா அல்லது EXIF என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

EXIF ரீடரினைப்பயன்படுத்தி அந்த போட்டாக்கள் எந்த ஆண்டு,எந்த மாதம்,எந்த நாள்,எந்த நேரம் எடுக்கப்பட்டுள்ளது என அறிந்து கொள்ளலாம்.ஆனால் இந்த மெட்டா டேட்டா தகவல்கள் போட்டோவினை எடிட்டிங் செய்யும் போது மாறுபட வாய்ப்பு உண்டு.எனவே எடிட்டிங் செய்யும் முன் ஒரிஜினலை அப்படியே வைத்துக்கொண்டு நகல் எடுத்து நம் வேலையைக்காட்டினால் நன்று.

டிஜிட்டல் ஒளிப்படங்கள் அனைத்தும் ஒரு போல்டரில் IMG_001.JPG,IMG_002.JPG......என்றோ அல்லது DSC001,DSC002.....என்றோ தானாகவே பெயரிட்டுக்கொண்டு இருக்கும். இப்படி தொடர்பே இல்லாமல் பெயரிடுவதற்குப் பதில் போட்டோ எடுக்கப்பட்ட நாள்,நேரம் ஆகியவற்றினையே பெயராகக்கொடுத்தால் எப்படி இருக்கும்.இதன் மூலம் போட்டோக்களினை கால வரிசைப்படி வரிசைப்படுத்துவதோடு பார்வையிடும் போதும் நமக்கு இனிமையாய் இருக்கும் அல்லவா.

மென்பொருள்களின் முகவரிகள்: http://www.bildecke.de/files/exifersetup.exe
http://www.digicamsoft.com/Namexif.exe
http://support.rysys.co.jp/ryuuji/exifr300_e.zip


இன்றைய ஸ்பெஷல்:


இலந்தை சு இராமசாமி அவர்கள் எழுதிய கீதாகோவிந்தம் தமிழில் சிறு மென்புத்தகமாக இங்கே உங்களுக்காக தரவிரக்க